என் மலர்
செய்திகள்

குஜராத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி
குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #lorryaccident
காந்திநகர்:
குஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் இன்று காலை சிமெண்ட் ஏற்றிச் செல்லும் லாரி சென்றுள்ளது. சிமெண்ட் மூட்டைகளுக்கு மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். பாவல்யாலி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #lorryaccident

Next Story