என் மலர்

  செய்திகள்

  உகாண்டா நாட்டில் மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி
  X

  உகாண்டா நாட்டில் மலைமுகட்டில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பஸ் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். #UgandaBusAccident
  கம்பாலா:

  உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் மலைமுகட்டில் கவிழ்ந்து விழுந்தது.  இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர். #UgandaBusAccident
  Next Story
  ×