என் மலர்
நீங்கள் தேடியது "thunder storm"
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UP #Thunderstorm






