search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP MLAs"

    • இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்
    • அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன்

    கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அதில், நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

    அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று பேசியுள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் அளித்தார்.

    அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது.

    • எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள்.
    • நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பா.ஜ.க.வில் போய் கூஜாவாக இருக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

    அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். உடனே நான் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அவினாசி சாலை என்பது பா.ஜ.க.வினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு பொது வழிச்சாலை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம்.

    அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பா.ஜ.க.வால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றி பெற வைத்தோம்.

    மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க.வில் இணைத்தது போல் இங்கும் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனை கூட பா.ஜ.க.வில் இணைக்க முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோவையில் வெற்றி பெற்றால் நான் அரசியல் வாழ்வை விட்டு விலகி கொள்கிறேன். எங்களால் தான் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றார்கள் என்பதை மறுக்க இயலாது. கள நிலவரம் எங்களுக்கு தான் தெரியும். தமிழகத்தில் கோவை அ.தி.மு.க.வின் கோட்டை. பா.ஜ.க.வால் தனித்து வெல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    சட்டசபையில் கவர்னர் குறித்து யாரும் பேசக்கூடாது என நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள். ஆனால் இப்போது ஒவ்வொருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதாக சபாநாயகரை பார்த்து குற்றம் சாட்டினார்.

    அப்போது சபாநாயகர் கூறும்போது, எம்.எல்.ஏ.க்கள் இங்கு கோப்புகள் பற்றி பேசினார்கள். கவர்னரை தனிப்பட்ட முறையில் இங்கு பேசவில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் பேசும்போது, குழந்தை தனமாக, சிறுபிள்ளைத்தனமான என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் கொண்டது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், குழந்தை தனம் என்பது கள்ளம் கபடம் இல்லாத மனசுக்கு சொந்தக்காரர் என்று கூட அர்த்தம் உண்டு. இந்த தீர்மானங்கள் மீது தான் உறுப்பினர்கள் பேசுகிறார்கள். நாளைக்கு நீங்களே கூட கவர்னர் ஆகலாம் என்றார். (அப்போது சபையில் பலத்த சிரிப்பொலி நிலவியது).

    நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகங்களில் வேந்தர்களை கவர்னரே நியமிக்கலாம் என்ற தீர்மானத்தை இதே சபையில் 1998-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரே கொண்டு வந்து இருக்கிறார். ஆனால் இப்போது அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'அப்போதெல்லாம் துணை வேந்தரை நியமிக்கும் போது அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து கலந்து பேசி தான் நியமித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இந்த நிலை என்றார்.

    நயினார் நாகேந்திரன்:- துணைவேந்தர் பதவி என்பது ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    இவ்வாறு பேசியதும், அதற்கு அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர். கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி அரசியல் செய்கிறார். எங்களை பொறுத்தவரை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு வேண்டும் என்றனர்.

    இதை ஏற்காத நயினார் நாகேந்திரன் வெளிநடப்பு செய்தார். அவருடன் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளியேறினார்கள்.

    பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழகத்தில் மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது. அந்த பிரச்சனைகளை மூடி மறைக்க கவர்னர் விஷயத்தை இந்த அரசு கையில் எடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் தி.மு.க. அரசுக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதி கவர்னரை பற்றி கூறுகிறார்கள்.

    எனவே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

    • தொகுதி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசியதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

    பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தொகுதி பிரச்சினையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    அதன் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி பிரச்சினை குறித்து பேசினோம்" என்றார்.

    கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், குருகிராமத்தில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்பி வரும்படி எடியூரப்பா அழைத்துள்ளார். #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
    பெங்களூரு:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பாஜகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பெங்களூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வரும் பாஜகவின் முயற்சிக்கு இணங்கக்கூடாது என கட்சி எம்எல்ஏக்களை கட்சியின் தலைவர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.



    ஆனால் இந்த குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
    ராஜஸ்தானில் பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலில் 25 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கொடுக்க வில்லை. #BJP #RajasthanElections

    புதுடெல்லி:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜே.பி. நட்டா இந்த பட்டியலை வெளியிட்டார். முதல்-மந்திரி வசுந்தராராஜே தனது பாரம்பரிய மிக்க ஜால்ரா பதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 25 பேருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை. அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 85 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    25 புதுமுகங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 12 பெண்களுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. #BJP #RajasthanElections

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என பா.ஜனதா நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #RajasthanAssemblyElection #BJP
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடம் ராஜஸ்தானின் தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலிட பொறுப்பாளரான அவினாஷ்ராய் கன்னா ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு பற்றி கருத்துக்கள் கேட்டார். மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கலாமா? அல்லது புதுமுகங்களை களத்தில் இறக்கலாமா? என்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவினாஷ் கன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த தவறான கருத்தும் இல்லை.

    ஆனால் செயல்பாடு சரி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பதில் புதுமுகங்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் பெயர் பெற்று நல்ல முறையில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவின் பலம் 160 ஆக உள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி பா.ஜனதா ரகசியமாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கினால் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

    இதுபற்றியும் அவினாஷ் ராய் கன்னா ஆலோசனை நடத்தினார். எனவே 60 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வாய்ப்பு இல்லை என்றும் அவர்களுக்கு பதில் மக்கள் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #RajasthanAssemblyElection #BJP
    உத்தரப்பிரதேசத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #UPbypolls #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காய்ரானா எம்.பி. தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கோபமாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எகிலாம் பிரகாஷ் முதல்-மந்திரி ஆதித்யநாத்தை கண்டித்து இந்தியில் கவிதை எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


    அதில், “முதல்வர் இயலாதவர்” என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் கைக்கு அதிகாரம் சென்றுவிட்டது. மோடியின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தோம். ஆனால் மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் நடைபெறவில்லை. சங்பரிவார் போன்ற இயக்கங்கள் உள்ளே நுழைந்து விட்டதால் முதல்-மந்திரி பதவி பயனற்று போனது.

    5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

    இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.

    இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath
    ×