search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurugram"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ பார்த்த காவல் துறையினர், காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர்.
    • வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை காவல் துறை பறிமுதல் செய்தது.

    ஓடும் காரின் மீது மர்ம நபர் ஒருவர் புஷ்அப் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவில் உள்ள நபர் எவ்வித தயக்கமும், பயமும் இன்றி சர்வசாதாரணமாக ஓடும் காரின் மீது புஷ்அப் எடுக்கிறார்.

    அதே காரில் இவருடன் பயணம் செய்தவர்கள் கார் ஜன்னலின் வெளியே தங்களது தலையை நீட்டுவது போன்ற காட்சிகளும் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருந்தன. வைரல் வீடியோவினை டுவிட்டரில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதனை குருகிராம் போக்குவரத்து காவல் துறை, குருகிராம் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் குருகிராம் காவல் துறையினரை டேக் செய்தார்.

    இவரது செய்கை புஷ்அப் எடுத்த நபருக்கு வினையாக அமைந்து இருக்கிறது. வைரல் வீடியோவை பார்த்த காவல் துறையினர், அதில் உள்ள காரின் பதிவு எண் கொண்டு புஷ்அப் எடுத்த நபரை பிடித்தனர். பொது இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபருக்கு போக்குவரத்து காவல் துறையினர் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், அடுத்தவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் குருகிராம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வைரல் வீடியோவில் விதிமீறலில் ஈடுபட்ட காரை பறிமுதல் செய்த காவல் துறையினர், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், குருகிராமத்தில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்பி வரும்படி எடியூரப்பா அழைத்துள்ளார். #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
    பெங்களூரு:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். பாஜக, தனது எம்எல்ஏக்களை அரியானா மாநிலம் குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. அவர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

    இது ஒருபுறமிருக்க, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் பாஜகவில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பெங்களூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வரும் பாஜகவின் முயற்சிக்கு இணங்கக்கூடாது என கட்சி எம்எல்ஏக்களை கட்சியின் தலைவர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.



    ஆனால் இந்த குழப்பத்திற்கு பாஜக காரணம் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். அத்துடன் குருகிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #KarnatakaPolitics #Yeddyurappa #BJP
    அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் அருகே கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி நீதிபதியின் மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீதிபதியின் மனைவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர்.

    பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நீதிபதியின் மகன் துருவ் (18) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.



    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மகிபால் என்ற பாதுகாவலரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack

    அரியானாவில் நீதிபதியின் மனைவி, மகன் மீது இன்று துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். #JudgeFamilyAttack
    குருகிராம்:

    அரியானாவில் உள்ள குருகிராம் நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த ஆர்கடியா மார்க்கெட் உள்ளது. இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட்டில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களது பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரே அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலரின் பெயர் மகிபால் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

    அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள சதார் போலீசார் தப்பியோட முயன்ற மகிபாலை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 
    இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JudgeFamilyAttack
    அரியானா மாநிலம் குர்கானில் வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குர்கான்:

    அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும், வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.

    அந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.

    இந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார்.

    ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×