மின்கம்பத்தில் ஏறிய கார் - வைரலாகும் புகைப்படம்

மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.
மின்கம்பத்தில் ஏறிய கார் - வைரலாகும் புகைப்படம்
Published on

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.

உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com