search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai"

    • து போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாரதி (வயது 34).ஜீவாநகர் உமாபாரத் லே அவுட் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.மது போதைக்கு அடிமையான இவர் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இரவு பகலாக தொடர்ந்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இவருடைய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாரதி அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.அந்த அறை முழுவதும் மெகா சைஸ் குப்பை தொட்டி போல குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
    • இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில் தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் படுமோசமாக பாதிக்கப்பட்டன. மரங்கள் பச்சையம் இழந்து கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.

    பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொடர்ந்துஊரடங்கு காலத்தில், விற்பனை வாய்ப்புகள் குறைந்தது. இவ்வாறுகடந்த இரண்டு ஆண்டுகளாக இளநீருக்கான தென்னை மரங்களை பராமரித்த விவசாயிகள்தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

    தற்போது வெள்ளை ஈ தாக்குதல் சற்று குறைந்து, இளநீர் காய்கள் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதே போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் நிலையாக மாறியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். தரத்தின் அடிப்படையில் இளநீர் 22-24 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நிலையான விலை கிடைத்தால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.கட்டுப்படுத்த முடியாத நோய் தாக்குதல் பரவும் போது, வேளாண்துறை வாயிலாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மானியத்தில் மருந்துகள் வாங்க அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது

     உடுமலை:

    தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே பொள்ளாச்சி ரோட்டில் ரோட்டை கடக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் கடைவீதிகளுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன.
    • காவலர் பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை :

    உடுமலை வழியாக சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர் உட்பட பல்வேறு வெளியூர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன. இந்நிலையில் பழனி ெரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அறிவுறுத்தல் படி காவலர் ரகு உடுமலை ரெயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், மேலும் ரெயிலை விட்டு இறங்கும்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்.

    சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் உடனே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    • கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
    • விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

    இதில் விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது; வெண்டை சாகுபடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும் தற்போது 16 கிலோ கொண்டபை ஒன்று ரூபாய் 500 முதல் 600 வரை விற்பனையாகிறது. வெங்காயம் தக்காளி உள்ளிட்ட சாகுபடியில் கடந்த சீசனில் விலை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

    • விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
    • மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உடுமலை நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு விற்பன செய்து மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது. இதில் ஆடு மாடுகள் மேய்ந்து பிளாஸ்டிக் உண்பதால் அவற்றுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குப்பை கிடங்கால் துர்நாற்றம் ஏற்பட்டு சந்தைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை உடனு க்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஓய்வூதியர் பாதுகாப்பு தினமான இன்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும், அனைத்து முதியோர்களுக்கும் வேறுபாடு பார்க்காமல் பணம், மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

    புதிய ஓய்வூதியத்திற்கு ரத்து செய்து ஏற்கனவே உள்ள பயனளிப்பு ஓய்வு பெற்று அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் அமைப்பு செயலாளர் ஸ்ரீரங்கன், அரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வூதியர் சங்கம் காளிமுத்து, மின்வாரியம் ஓய்வூதியம் பெற்றோர் நல அமைப்பு எஸ்.எஸ்.அலி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதிய அமைப்பு செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கோவை மற்றும் பொள்ளாச்சி தாலுகாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல்சரக பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை டி.எஸ். பி., தேன்மொழிவேல் தலைமையில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இரவு பகலாக வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் தளி காவல் சரக பகுதியில் பள்ளபாளையம் அருகே உடுமலை- மூணாறு சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களை தணிக்கை செய்தும் அதில் செல்கின்ற நபர்கள் குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
    • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.

    ×