search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை மேம்பாலம்"

    • பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


    இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    • போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது.
    • போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் நகரப்பகுதியில் பல்வேறு முக்கியமான ரோடுகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது. குறிப்பாக புஷ்பா சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ள நிலையிலும் பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

    இதனால் போக்குவரத்து துணை மற்றும் உதவி கமிஷனர்கள், வடக்கு போக்குவரத்து போலீசார் ஆலோசித்து, இப்பகுதியில் சோதனை அடிப்படையில் சில மாற்றங்களை துவங்கினர். அவ்வகையில் பி.என்., ரோட்டிலிருந்து வந்து அவிநாசி ரோடு மற்றும் காலேஜ் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், ஐ பவுண்டசேன் வழியாக ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்று திரும்பி மீண்டும் புஷ்பா சந்திப்பு வந்து செல்ல வேண்டும்.

    காலேஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்,ெரயில்வே மேம்பாலம் செல்ல அவிநாசி ரோடு வழியாக கீரணி சந்திப்பு, ராம் நகர் வழியாக பி.என். ரோடு அடைந்து, புஷ்பா சந்திப்பை கடந்து செல்ல வேண்டும்.அதற்கேற்ப ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர புஷ்பா சந்திப்பு பகுதியில் ரோட்டைக் கடக்கும் பாதசாரிகள் அனைவரும் முழுமையாக அங்குள்ள நடை மேம்பாலத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதனால் சிக்னலுக்கு முழுமையாக வேலையே இல்லாத நிலை ஏற்படும்.இந்த நடைமுறை மாற்றம் சோதனை அடிப்படையில் ஒரு சில நாட்கள் பின்பற்றப்படும். அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் அதற்கேற்ப இதில் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
    • கிண்டி, பரங்கிமலை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன.

    சென்னை:

    சென்னையில் ரெயில் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. அப்போது கடற்கரை- தாம்பரம் வழித் தடத்தில் உள்ள ரெயில்வே நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பாக ஒவ்வொரு பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட்டன.

    அந்த காலத்தில் 3 மீட்டர் அகலத்துடன் இந்த நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது பயணிகள் வருகை அதிகரிப்பு ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் ஆகிய காரணங்களால் நூற்றாண்டை கடந்த இந்த நடை மேம்பாலங்கள் போதுமானதாக இல்லை.

    இதனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    கிண்டி, பரங்கிமலை, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் தற்போது கிண்டி ரெயில் நிலையத்தில் உள்ள பழைய ரெயில்வே நடை மேம்பாலம் இடிக்கப்பட்டு வருகிறது.

    புதிதாக ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரெயில் நிலையத்தையும், மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு நடை மேம்பாலம் அமைப்பது சவாலான பணியாகவே இருந்தது. இதனால் படிப்படியாக இடித்தனர். முதலில் கீழ் பக்கம் இருந்த டிக்கெட் கவுண்டரை இடித்துவிட்டு மேல் தளத்தில் கட்டி புதிய நடை மேம்பாலத்துடன் இணைத்தனர்.

    பழைய நடை மேம்பாலம் 2 விரைவு ரெயில் பாதைகளையும், புறநகர் மின்சார ரெயில் பாதைகளையும் கடந்து செல்லும்படி அமைந்திருந்தது. இந்த நிலையில் மேற்கு பகுதியில் புறநகர் மின்சார ரெயில் வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டது. அதன் அருகே மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்தது.

    எனவே தற்போது மேற்கு பக்கம் ஜி.எஸ்.டி. சாலையும், கிழக்கு பக்கம் ரேஸ் கோர்ஸ் சாலையையும் இணைத்து புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு சாலைகளுக்கும் செல்ல வேண்டிய பாதசாரிகள் இந்த புதிய நடை மேம்பாலம் வழியாக எளிதில் செல்ல முடியும்.

    அந்த காலகட்டத்தில் கட்டப் பட்ட பழைய நடை மேம்பால தூண்கள் ரெயில்வே பாதையின் அருகில் இருந்தது. இதனால் ரெயில்களில் படிக்கெட்டில் தொங்கியபடி செல்பவர்கள் ஆபத்தில் சிக்கியதும் உண்டு.

    கடந்த 2018-ம் ஆண்டு படிக்கட்டில் அதிகமானோர் தொங்கியபடி சென்றதில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கட்டுமானத்தில் இடிபட்டு விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

    தற்போது புதிய நடை மேம்பாலம் அகலமாகவும், தேவையான அளவு இடை வெளிகளில் தூண்கள் அமைத்தும் கட்டப்பட்டு இருப்பது பயணிகள் பயணத்துக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் இன்னும் 30 நாட்களில் முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இனி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருந்து புறநகர் ரெயில் நிலையத்தில் இருக்கும் எந்த பிளாட் பாரத்துக்கும் செல்ல முடியும். மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் செல்ல முடியும். பாதசாரிகள் ஜி.எஸ்.டி. சாலைக்கும் சிரமமின்றி செல்லலாம்.

    • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
    • விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரப் பகுதியில் முக்கிய ரோடுகளாக உள்ள அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு ஆகிய ரோடுகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

    பெரும்பாலான ரோடுகளில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் ஆகிய வசதியில்லாத நிலை இருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய ரோடுகளில், நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, பார்க் ரோடு, ெரயில் நிலையம் ,காங்கேயம் ரோடு ஆகிய பகுதிகளில் உயர் மட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.அதேபோல் அவிநாசி ரோடு, புஷ்பா சந்திப்பு பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாதக்கணக்கில் மேற்கொண்ட பாலம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் மீது வர்ணம் பூசும் பணி தற்போது நடக்கிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.
    • நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    உடுமலை :

    உடுமலையில் கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் உள்ளது. கோவை ,பாலக்காடு ,பொள்ளாச்சி ,ஊட்டி ,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை வருகின்றனர்.

    பஸ் நிலையம் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் பயணிகள்- பொதுமக்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர்.

    இதையடுத்து உடுமலை நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

    இதனால் மக்கள் ரோட்டை கடக்க சிரமப்படுவது தொடர்கிறது.அவசரமாக ரோட்டை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது .எனவே நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது

     உடுமலை:

    தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே பொள்ளாச்சி ரோட்டில் ரோட்டை கடக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஒரு ஆண்டுக்கு முன் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அது திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே ரோட்டை கடந்து பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கம் கடைவீதிகளுக்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×