என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
    X

    மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    உடுமலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×