search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஊழியர்"

    • மாணிக்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
    • கடந்த 4 ஆண்டுகளாக மாணிக்கம் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    நெல்லை:

    சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 65). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடந்த 4 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகாததால் அவர் வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமேஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முருகப்பெருமாள் (வயது 49).

    இவர் ஆவரைகுளம் பெருங்குடி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து முருகப்பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார். அவர் ஆரல்வாய்மொழிக்கும் பணகுடிக்கும் இடையே ரெயில்வே தண்டவாளம் அருகே முருகப்பெருமாள் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ராமேஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகபெருமாள் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். முருகப்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பலியான முருக பெருமாள் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு உள்ளனர். மின்வாரிய ஊழியர் ரெயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரிய வந்தது.
    • நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நேசமணி நகர் 2-வது குறுக்கு தெரு வை சேர்ந்தவர் ஜோஸ்பின் தாமஸ் (வயது 62), முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜோஸ்பின் தாமஸ் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து ஜோஸ்பின் தாமஸ் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அப்போது கொள்ளையன் உருவம் சிக்கியது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பது தெரிய வந்தது. சாந்தகுமார் வல்லன்குமாரன்விளையில் உள்ள மின்வாரிய அலுவல கத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட சாந்தகுமாரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் வடசேரி பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சாந்தகுமார் விஷம் மாத்தி ரைகளை தின்றார். உடனடியாக அவரது நண்பர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சாந்தகுமார் பரிதா பமாக இறந்தார். சாந்தகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொள்ளையில் ஈடுபட்ட சாந்தகுமாரை கைது செய்ய சென்றபோது அவர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைமறைவாக இருந்த மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஆனந்தம் பாளையத்தை சேர்ந்தவர் கோபால் (58). இவர் அதே பகுதியில் பால் சொசைட்டி செயலாளராக உள்ளார். இவரது மகன் மோகன சுந்தரம் எலக்ட்ரீசியன் படித்து முடித்துள்ளார்.

    இந்நிலையில் கோபாலு க்கு பவானி சிங்கம் பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (45) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பூனாச்சி துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் மூர்த்தி தனக்கு மின் வாரியத்தில் தலைமை அதிகாரிகள் பழக்கம் உள்ளது என கோபாலிடம் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோபால் தனது மகன் மோகனசுந்தரத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக கோபாலிடம் முதற்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கியுள்ளார்.

    பின்னர் மேலும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வேலை உறுதியாகி விட்டதாக கூறி மேலும் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு தபாலில் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளார்.

    இந்த பணி நியமன ஆணையுடன் மோகன சுந்தரம் மின்வாரிய அலுவல கத்தில் பணியில் சேர சென்றபோது அவை போலி என தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த தந்தையும், மகனும் மூர்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதிலளி க்காமல் தலைமறை வாகி விட்டார்.

    இதேப்போல் அந்தியூர் பிரம்மதேசத்தை சேர்ந்த விஜயகுமார், வெற்றிவேல் ஆகியோரிடமும் மின்வாரி யத்தில் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.4 லட்சம் மூர்த்தி பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தியூர், பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1 கோடியே 25 லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி மூர்த்தி ஏமாற்றியது தெரியவந்தது.

    2 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மூர்த்தி யை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த மோசடியில் மூர்த்திக்கு மூளையாக மற்றொருவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது தலை மறைவாக உள்ளார்.

    அவரை பிடி க்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் பிடிப்ப ட்டால் இந்த மோசடியில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும்.

    • தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாணையால் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, சம்பள உயர்வு, பஞ்சபடி ,புதிய பதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டி உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பஞ்சப்படி உயர்வு காலம் தாழ்த்தி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பறிக்கும் விதமாக அரசாணை உள்ளதால் அரசாணைைய உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் மாரிமுத்து ,கணக்காளர் தொழிலாளர் பொன்ராஜ், சிஐடியு. கோவிந்தன், ஏடிபி. சக்திவேல் ,ஐக்கிய சங்கம் செல்வராஜ், என்ஜினீயர் சங்கம் ஜெயக்குமார், என்ஜினீயர் கழகம் செல்வகுமார், மோகன் உட்பட 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டனர்.

    • ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும்.
    • 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை அனல் மின்நிலையம் அலகு-3ன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளைமுழுவதுமாக அயல்பணிக்கு ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்திற்குசொ ந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தரவுகளை தனியார் ஏஜென்சியிடம்ஒப்படைக்கக்கூடாது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பையும் மற்றும் ஜனவரி 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும். தரமான தளவாட பொருட்கள்தடையின்றி தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி .என்.ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் இன்று காலை முதல் கா த்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ராஜமாதேஸ்வரன் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் மனைவி பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாதேஸ்வரன் (வயது 57). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒயர் மேனாக பெருந்துறை பகுதியில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், கல்பனா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜமாதேஸ்வரன் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் மனைவி பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன ராஜ மாதேஸ்வரனை தேடி வருகிறார்.

    • மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.
    • முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் முத்துசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. முத்துசாமியும் ஆலாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருக்கும் மாரியப்பன் ( 38) என்பவரும் நண்பர்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிமணிக்கு போன் செய்த மாரியப்பன், அவரது மனைவிக்கும் முத்துசாமிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாகவும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.அப்போது என் குடும்பத்தை சீரழித்த முத்துச்சாமியை சும்மா விட மாட்டேன் என்று மாரியப்பன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் முத்துச்சாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கார் முத்துச்சாமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தன் மொபட்டின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மாரியப்பன், நீ உயிரோடு இருப்பதை விட செத்து தொலைவதே மேல் என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப நண்பரை பூசாரி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×