search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB Worker"

    • கணேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
    • கணேசன் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது50). மின்வாரிய ஊழியர். இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணேசன் தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடந்தார்.

    அவர் 4 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளதாக தெரிகிறது. இதனால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இவரை சஸ்பெண்ட் செய்ததாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த அவர் மதுக்குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த கணேசன் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.
    • முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் முத்துசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ஜோதிமணி. முத்துசாமியும் ஆலாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவில் பூசாரியாக இருக்கும் மாரியப்பன் ( 38) என்பவரும் நண்பர்கள்.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிமணிக்கு போன் செய்த மாரியப்பன், அவரது மனைவிக்கும் முத்துசாமிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாகவும் அவரை கண்டித்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு ஜோதிமணி சென்றுள்ளார்.அப்போது என் குடும்பத்தை சீரழித்த முத்துச்சாமியை சும்மா விட மாட்டேன் என்று மாரியப்பன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை உடுமலை திருமூர்த்திமலை ரோட்டில் முத்துச்சாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கார் முத்துச்சாமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி பலத்த காயங்களுடன் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தன் மொபட்டின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய மாரியப்பன், நீ உயிரோடு இருப்பதை விட செத்து தொலைவதே மேல் என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியுடன் தவறான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு குடும்ப நண்பரை பூசாரி காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×