search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்டைக்காய்"

    • தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
    • இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ. 24 முதல் 36, தக்காளி - ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் - ரூ. 20 முதல் 25, அவரை - ரூ.40 முதல் 50, கொத்தவரை - ரூ.25, முருங்கைக்காய் -ரூ.30, முள்ளங்கி -ரூ.16, புடல்- ரூ.32 முதல் 40, பாகல்-ரூ.40 முதல் 44, பீர்க்கன் -ரூ.40 முதல் 56, வாழைக்காய் -ரூ.28, வழைப்பூ (1)- ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1)- ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் -ரூ.20, பூசணி- ரூ.15, சுரைக்காய் -(1) ரூ.10 முதல் 12, மாங்காய்- ரூ.60, தேங்காய் -ரூ. 27, எலுமிச்சை -ரூ. 80, கோவக்காய்- ரூ.40, சி.வெங்காயம்- ரூ. 30 முதல் 46, பெ.வெங்காயம்- ரூ.30 முதல் 35, கீரை -ரூ.30, பீன்ஸ் -ரூ.60 முதல் 68, கேரட் -ரூ.40 முதல் 48, பீட்ரூட்- ரூ.30 முதல் 40, உருளைக்கிழங்கு -ரூ.27 முதல் 30, சவ்சவ்- ரூ.28, முட்டைகோஸ்- ரூ.15 முதல் 20, காளிபிளவர்- ரூ.15 முதல் 25, குடைமிளகாய் -ரூ.50, கொய்யா -ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம்- ரூ.50, பச்சை பழம்- ரூ.25, கற்பூரவள்ளி- ரூ.40, ரஸ்தாளி- ரூ.30, செவ்வாழை -ரூ.50, பூவன் -ரூ.20, இளநீர்- ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை -ரூ. 40, மல்லிதழை -ரூ. 40, புதினா -ரூ. 30, இஞ்சி- ரூ.150, பூண்டு- ரூ. 50, ப.மிளகாய்- ரூ. 40 முதல் 50, வாழை இலை- ரூ.30, மரவள்ளிக்கிழங்கு- ரூ. 30, மக்காச்சோளம்- ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு- ரூ.70, கருணைக்கிழங்கு- ரூ.70, பப்பாளி- ரூ. 30, நூல்கோல்- ரூ. 32 முதல் 36, நிலக்கடலை- ரூ. 50, கொலுமிச்சை- ரூ.30, சப்போட்டா- ரூ.40, தர்பூசணி- ரூ.15, விலாம்பழம்- ரூ.40.

    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது.
    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் "வெண்டைக்காய்" சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    வெண்டைக்காய் ஆங்கிலத்தில் 'லேடிஸ் ஃபிங்கர்ஸ்' என அழைக்கப்படுகிறது. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. வெண்டைக்காய் அதிகமாக சாப்பிட்டால், அதன் காம்பை போலவே நமது புத்திக் கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காயில் சிறந்த மாவுச்சத்து பொருட்கள் உள்ளன. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளது.

    வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 % கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

    வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளியேறுதல் அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவம் சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

    இதன் காய், இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும், பிஞ்சுகளை நறுக்கி போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

    வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

    உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.

    உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

    • மகிளிப்பட்டி கிராமத்தில் வெண்டைக்காய் சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது
    • வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் வெண்டைகாய்களை பறித்து உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். தற்போது கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய்களுக்கு ஓரளவு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது.
    • அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாணியம்பாடி, கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்களை சேலம் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்கின்றனர். குறிப்பாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது. அப்போது வெளி மார்க்கெட்டுக்கள், மளிகை கடைகள், வணிக வளா கத்தில் உள்ள கடைகளில் 75 ரூபாய்க்கு விற்றது.

    இந்த நிலையில் சில நாட்களாக வெண்டைக் காய்க்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இது குறித்து பன மரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தட்டுப்பாட்டால் வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

    • வழக்கமாக வெண்டைக்காய் பறிப்பதற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.250 கூலியாக வழங்குவோம்.
    • நாங்கள் விளைவித்த காய்கறிகளை பறிக்காமல் அப்படியே எங்களது கால்நடைகளுக்கு தீவனமாக்க முடிவு செய்து ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நெல்லை டவுன் மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளப்பநேரி கிராமத்தில் தற்போது வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு அதனை மூட்டைகளில் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு ரூ.2 -க்கு மட்டுமே ஒரு கிலோ விற்பனையானது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்தனர். இதேபோல் அந்த பகுதிகளில் தக்காளி விளைவித்த வியாபாரிகளுக்கும் ரூ.5 வரை மட்டுமே தக்காளி விலை போனதால் அவர்களும் வருத்தம் அடைந்தனர்.

    இதனால் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்டவற்றை சாலைகளில் கொட்டினர். இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அவற்றில் விவசாயிகள் தங்களது மனக்குமுறலையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக விவசாயி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக வெண்டைக்காய் பயிரிட்டு வருகிறோம். வழக்கமாக வெண்டைக்காய் பறிப்பதற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.250 கூலியாக வழங்குவோம். ஒரு தொழிலாளி 40 கிலோ முதல் 45 கிலோ வரை ஒரு நாளைக்கு பறிப்பார்.

    அவற்றை சாக்குமூட்டைகளில் கட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல சாக்குக்கு மட்டும் ரூ.40 செலவாகிறது. ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் மார்க்கெட்டில் இன்று ஒரு மூட்டையின் விலை ரூ.100-க்கும் குறைவாகவே உள்ளது. இதேபோல் தக்காளியும் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. பனிப்பொழிவு காரணமாக அவையும் செடிகளிலேயே கறுப்பாகி விடுகிறது. பறிப்பதற்கு முன்பாகவே அவை அழுகி விடுகிறது. அவ்வாறு பத்திரமாக பாதுகாத்து பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றாலும் 5 ரூபாய்க்கு மேல் விலை போகவில்லை.

    இதனால் நாங்கள் விளைவித்த காய்கறிகளை பறிக்காமல் அப்படியே எங்களது கால்நடைகளுக்கு தீவனமாக்க முடிவு செய்து ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளோம். காய்கறி பயிர்களுக்கு அரசு நிலையான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எங்கள் நிலை மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
    • விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

    இதில் விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது; வெண்டை சாகுபடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும் தற்போது 16 கிலோ கொண்டபை ஒன்று ரூபாய் 500 முதல் 600 வரை விற்பனையாகிறது. வெங்காயம் தக்காளி உள்ளிட்ட சாகுபடியில் கடந்த சீசனில் விலை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

    • விசேஷ நாட்களில் வெண்டைக்கு விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

    குடிமங்கலம் :

    வெண்டைக்கு சந்தையில் நிலையான விலை கிடைத்து வருகிறது. விசேஷ நாட்களில், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை கண்ணமநாயக்கனூர், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், குட்டியகவுண்டனூர்,பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், ஆடிப்பட்ட சாகுபடியில் வெண்டைக்காய் அறுவடை துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலை உழவர் சந்தையில் வெண்டை கிலோ 18-24 ரூபாய் வரை விலை கிடைத்தது.விவசாயிகள் கூறுகையில், பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில் வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். வரும் ஆவணி மாதத்தில் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

    ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றனர்.

    ×