search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin"

    • கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • கைத்தொழில்  திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, சங்கரபேரி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்லாநத்தம், ராஜாவின் கோவில், சாமிநத்தம், குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை அளிக்கும் பிரதான நிறுவனமாக செயல்பட்டு வந்தது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை வழங்கியது. கைத்தொழில்  திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.

    பள்ளி குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விளையாட்டில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது.

    ஆனால் இந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தூத்துக்குடியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    தூத்துக்குடி:

    ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் வருமானவரி அலுவலகம் முன்பு 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் மூவர்ண கொடியேந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ்,எடிண்டா, கற்பககனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ்,

    வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன்துரை,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,

    மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் கோபால், சேவியர் மிஷியர், குமாரமுருகேசன், அபுதாங்கீர், மைக்கேல், சின்னகாளை, மைக்கேல், நிர்மல் கிறிஸ்டோபர், பிரபாகர், கனியம்மாள், பெட்டின்,அந்தோணிசாமி, ஜான்சன், சசிபர்னாந்து, நீயூமன், கிருஷ்ணன், சுந்தர்ராஜன்,

    ஜெயகிங்ஸ்டன், மகாலிங்கம், ராஜரத்தினம், சேகர், சீனியப்பன், மகேந்திரன், மெர்லின், பாக்கியராஜ், ஐ.என்.டி.யூ.சி. ராஜா, சாந்தி, வால்டர், யூஜின், பெருமாள்,கனகராஜ்,கமலேசன், சுப்பையா, பட்டு, நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் மாநில அளவிலான கோடைகால கபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது.

    நிறைவு விழாவில் அமைச்சரும், தூத்துக் குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:-

    கபடி விளையாட்டில் சாதனை படைத்தது சன் பேப்பர் மில். அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள் கன்னியாகுமரி ராஜரத்தினம், மணத்தி கணேசன் ஆகியோரை உலகிற்கு அடையாளப்படுத்தியது கபடி.

    விளையாட்டு அகடமி விரைவில் இப்பகுதியில் தொடங்கப்படும். மேலும் கல்லூரி பள்ளி மாணவ- மாணவிகள் தாங்கள் படிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகள் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகள் பெற்றுத் தரப்படும். அரியானாவில் எப்படி வீரர்கள் உருவாக்கப்படுகிறார்களோ அதே போன்று தமிழகத்திலும் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.

    விளையாட்டு வீரர்கள் தங்களது முயற்சியை கை விட்டு விடக்கூடாது. விளையாட்டு போதைப் பொருட்களிலிருந்து அடிமையாவதை தடுக்கும். எனவே அனைவரும் சீரிய முறை யில் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட் டில் மென் மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்விற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கி பேசியதாவது: -

    கபடி விளையாட்டு தேசிய அளவில் 1972-லும் உலக அளவில் 2004-லும் இந்திய அளவில் மகளிர் 2005-லும் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பதற்கு மூன்று முக்கிய கோட்பாடுகளை கையாள வேண்டும். ஒன்று ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதன் நுணுக்கங்களை கற்று ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.

    இரண்டாவது தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கனம் பண்ணும் போது உங்களுக்கு சந்தோஷம், சமாதானம் கிடைக்கும். மூன்றாவது உண்மையுள்ள மனிதன் உயர்த்தப்படுவான் என்று வேத வசனத்தின்படி உண்மையுடன் நடக்க வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளை நீங்கள் கை கொண்டு நடந்தால் விளை யாட்டுத்துறையில் நீங்கள் உலகளவில் சாதிக்கலாம் என்று பேசினார்.

    விழாவில் முகாம் பொறுப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட் டுத்துறை பொறுப்பாளர் எட்வின், திமுக மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன்,

    தொழிலதிபர் ஜி ஆர் ரமேஷ் கிருஷ்ணன் டாக்டர் அன்பு ராஜன் நடுவர் குழு சேர்மன் கண்ணன் கன்வீனர் நடுவர்கள் மைக்கேல், அசோக்,அர்ஜுனன் பொன்னையா சாமுவேல், ஜானகிராமன், வேல்மணி, சிவா,மந்திரம், தமிழ்மணி, அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுவிடுவிக்கிறார் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் அன்புராஜன் நன்றி கூறினார்.

    முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபடி கழகமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும் புதுவாழ்வு சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.

    தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. 

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தருவைகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார்.
    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை  தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் யூரியா பிரிவில் அம்மோனியா சேமிப்பு கொள்கலனிலிருந்து வெளிவரும் குழாயில் அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.

    இதை ஸ்பிக் நிறுவன தொழிற்சாலை பொது மேலாளர் செந்தில் நாயகம் அவசர கால கட்டுப்பாடு அறையிலிருந்து அம்மோனியா கசிவை கட்டுப்படுத்த உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் ஆலோசனை வழங்கினார்.

    தொழிற்சாலை தலைவர் அறிவுரையின்படி தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து கொண்டு அம்மோனியா சகிவினை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சுற்றுச்சூழலில் மாசு நிலை சரி பார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்பட்டது.

    இதில் ஸ்பிக் மற்றும் கணநீர் ஆலை நிறுவனத்தின்  தீயணைப்பு துணை வீரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உதவி பொதுமேலாளர் ரவிச்சந்திரன் ஒத்திகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    அவசர கால ஒத்திகை முடிந்தபின் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனரான நிறைமதி ஒத்திகை  நடத்திய அனைவரையும் பாராட்டினார். மேலும் ஒத்திகையை சிறப்பாக நடத்த அவரது மேலான கருத்துக்களை தெரிவித்தார்.
    தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல் நகரை சேரந்தவர் நாகராஜ் ( வயது 27), கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் வைகாசி அவதார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி திருநட்சத்திரத்தில் அவதரித்ததை முன்னிட்டு ஆண்டு தோறும் பிரமோத்சவ விழா 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இம்மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    சுவாமி நம்மாழ்வார் அவதார விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மங்களாசாசனம் வைபவம் நடைபெறும்.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் தினமும் தங்கதோளூக்கினியன் வீதி புறப்பாடு, மாலையில் இந்திர விமானம், புஷ்பபல்லாக்கு, புன்னைமர வாகனம், தங்க திருப்புளி வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது.

    7-ந்தேதி செவ்வாய்க் கிழமை 5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்கள் கொடி குடை ஆலவட்டம் பதாகைகள் திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக நவ திருப்பதி பெருமாளை மங்களாசாசனம் (வரவேற்க) பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று இரவு 9 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி உற்சவரான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆகியோர் வரவேற்று மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ந்தேதி சனிக்கிழமை 9-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் நடைபெறுகிறது. 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10-நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலையில் நடக்கிறது.

     நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் அலுவலக இளநிலை உதவியாளர் பெருமாள் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
    தமிழகத்தில் குட்கா புழக்கம் தாராளமாக உள்ளது என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
    தூத்துக்குடி:

    வல்லநாடு வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்திற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று வருகை தந்தார். 

    மணிமண்டபத்தில் குதிரையில் வெள்ளையத் தேவன் அமர்ந்திருப்பது போன்ற புதிய வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளை யத்தேவனுக்கு மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. முழு உருவ வெண்கலை சிலை அமைக்கவும் ரூ.39.75 லட்சம் அ.தி.முக. ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குட்கா பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  குட்கா பொருட்கள் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படுகிறது எனில் அந்த அளவிற்கு தாரளமாக புழக்கத்தில் உள்ளது.

    எம்,எல்.ஏ., உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தி.மு.க. மாவட்டக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்று கின்றனர். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல் தான். 

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் ஆக முடியும். தி.மு.க.வில் வாரிசுகள் தான் பதவிக்கு வர முடியும். சசிகலா அ.தி.மு.க.வுக்கு  வந்தால் வரவேற்போம் என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொல்லி உள்ளார். இதுகுறித்து சசிகலா தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், யூனியன் துணை சேர்மனும், ஒன்றிய செயலாளருமான லெட்சுமணப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், அவ்வையார், முன்னாள் கவுன்சிலர் உடையார், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், பசும் பொன் மக்கள் இயக்க தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆதிநாதன், முன்னாள் அவைத்தலைவர் பிள்ளை முத்து, ஒன்றிய பொருளாளர் ஜேசிபி குமார், கிளைக் கழக தலைவர் தங்கபாண்டி, பல்க் மணி, திருமலை, சிவனு, வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்.பாதர்வெள்ளை, எம்.ஜி.ஆர். மன்றம் பரம சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
    தென்திருப்பேரை:

    பா.ஜனதா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிர் அணி பேரணியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். சடகோபனை கேசவ விநாயகம் சால்வை அணிவித்து வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்தராங்கதன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜாங்கண்ணன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட துணை தலைவி ரேவதி, மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட வணிக பிரிவு செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் குமரேசன், மாவட்ட அரசு தொடர்பு தலைவர் பாலசுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய பிரசார பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பிக்நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதி கழகம் சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
     
    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், ஸ்பிக் நகர் பகுதி  தி.மு.க. செயலாளர்  பொன்னரசு, 58-வது வட்டம் கருப்பசாமி, நிர்வாகிகள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், மரியகிராஜன், அந்தோணிராஜ், எஸ்.ஆர். ஜெ.அருண் குமார், கே.பி.ஆர்.ராஜ், திருமணி ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் 58-வது வார்டு பச்சிராஜ், 55-வது வார்டு ராஜதுரை, அத்திமரப்பட்டி பால்பாண்டி நாடார், தங்கராஜ், கல்பனா, வசந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்  கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் எட்டையபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

    பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல்  பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     மேலும் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங்,

    மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள்,

     வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன்,  ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், அண்டன் பொன்சேகா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், முத்துராமன், சங்கரநாராயணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,

    மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத்து. ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன்பாபு, சுபேந்திரன், விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, ராமர், கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, அதிஷ்டமணி, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், முத்துவேல், சரண்யா, ஜான், ராமும்மாள்,

    விஜயலட்சுமி, ரெக்ஸின், மகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வக்குமார், ஜெயசிங், தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், நாராயணன், டென்சிங், மூக்கையா, மற்றும் சுப்பையா, பிரபாகர், கருணா, அல்பர்ட், ராஜா, மகேஸ்வரசிங், அருணகிரி, பாலசுப்பிரமணி, பெரியசாமி, சிவசுந்தர், இசக்கி, அற்புதராஜ், பெலின்டஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.      

    ம.தி.மு.க. சார்பில் ஓன்றிய செயலாளர் வீரபாண்டிய சரவணன், மாநகர செயலாளர் முருகபூபதி, நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி நெல்சன் முத்து நகர் கிளை செயலாளர் பிரபாகர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர் ராஜ் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செய்திருந்தார்கள்.
    சாயர்புரம் போப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கல்லூரி இயற்பியல் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  போப் கல்லூரி முதல்வர் டாக்டர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜெபராஜ் தேவதாஸ் வரவேற்றார்.

     இந்த நிகழச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவர் மாவட்ட முன்னாள் கல்வி இயக்குனர் ரத்தினம், துறைமுகம் போக்குவரத்து முன்னாள் அலுவலர் சவுந்திரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார் அறிக்கை வாசித்தார்.

     நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சாந்தினி கிரேஸ் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜான்சன் நவமணி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் செல்வகுமார், தினகரன், ஜெயசிங் ஆகியோர் செய்தனர்.
    ×