search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treatment"

    • அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
    • குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது.
    • அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் அவரது உறவினரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது. இதனை செந்தில் (38) என்பவர் ஓட்டி சென்றார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரைக்கால் அருகே மேலகாசாக்குடி சாலை வளைவில் ஆம்புலன்ஸை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது. மது போதையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நோயாளியையும், அவரது உறவினரையும் மீட்டு, வேறொரு வாகனத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காரகை்கால் நகர போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

    • லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் திருநாகேஸ்வரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது.

    லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38). கண்டக்டர் புதுச்சேரி திருப்புவனம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியை சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ் நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 32). இவர் கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை சிகாமணி இவருக்கு டீ வாங்கி வருவதற்காக எதிரே உள்ள டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகனை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜசேகரை தேடி வருகிறார்.

    • மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் தெரபி எனும் புதிய சிகிச்சை முறை.
    • மூளையின் காந்த ஆற்றலை அறிந்து கொள்ள கர்மா பீக் பிரைய்ன் அறிமுகப்படுத்தும் நவீன கருவி.

    சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ சேவை மற்றும் ஆய்வு மையம் கர்மா பீக் பிரைய்ன். இந்த சேவை மையம் ஆட்டிசம் மற்றும் மாற்று திறன் படைத்த சிறப்பு குழந்தைகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இந்த மையம், மூளை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கு நவீன கருவி மற்றும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    இந்நிறுவனம் தற்போது புதிதாக கண்டுபிடித்திருக்கும் பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து இந்த சிகிச்சையை நிறுவனம் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்தக் குழு மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு முன்னர் குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எந்த மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்துகிறது.

    நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை நியூரோரெஸ்டரேசன் மூலம் மேம்படுத்துவதிலும் இந்த குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தற்போது இவர்கள் கண்டறிந்திருக்கும் புதிய சிகிச்சை முறை வெகுவாக பலன் அளித்து வருகிறது. மேலும் இது நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், இந்த சிகிச்சையை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

    கர்மா பீக் பிரைய்ன் கண்டறிந்திருக்கும் தனித்துவமான சிகிச்சை முறை தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மேம்பட்டது. இதன் மூலம் நோய்க்கான அறிகுறிகளையும், நோய்க்கானக் காரணங்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கவனம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், மனப்பதட்டம், மன இறுக்கம், நடத்தை பிரச்சனைகள், உறக்கமின்மை, ஒற்றைத் தலைவலி... உள்ளிட்ட ஏராளமான மூளை தொடர்பான நரம்பியல் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சைகளை தேர்வு செய்து, அதனை எளிய முறையில் வழங்கி நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

    இந்த சிகிச்சை முறைப்படி நோயாளிகளின் மூளை பகுதியை இசிஜி அல்லது ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிவது போல்.. மூளை மேப்பிங் எனப்படும் முறையை எனும் கருவியை பயன்படுத்தி மூளையின் மின்னாற்றல், அதன் இயங்குதிறன் மற்றும் செயல்பாட்டை துல்லியமாக அளவிட இயலும். இது தொடர்பான உங்களுக்கு இலவச சேவை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள எங்களுடைய contact@karmapeakbrain.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த இலவச சேவைகளை பயன்படுத்திக் கொண்டு உங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூளை மேப்பிங் செய்து உங்களுடைய மூளையின் செயல்பாடு, இயங்குத்திறன், மின்னாற்றல் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் மேம்பட்ட தரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்.

    • படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
    • சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் வெடிவிபத்தில் காயமடை ந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரியலூர் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கி வர வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.

    தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சி யர் இலக்கியா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பொறுப்பு செல்வகுமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    • கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
    • காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்
    • 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30)ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்,நேற்று இரவு பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் ஓடப்பன்குப்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணி அளவில் கொஞ்சி குப்பம் அய்யனார் கோவில் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் ஆம்புலன்ஸ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவர் அதே ஆம்புலன்சில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்புலன்ஸ் மோதி பலியான முதியவர் கொஞ்சிகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (75) எனவும், இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்று பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ராமலிங்கத்தின் உடலை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.
    • திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 65). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகேசன் குமரேசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் அவருடைய மனைவி வாசுகி புள்ளமங்கலத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வயலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சீனிவாசன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கடந்த 2 தினங்களாக தேடி வந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று வடவேர்குடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு வழியாக காலைக்கடன் கழிப்பதற்காக கிராம மக்கள் சென்றுள்ளனர்.

    அப்போது சுடுகாடு மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதனைப் பார்த்தவுடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் இடிந்து விழுந்த சுடுகாடு மேற்கூறையை அகற்றிய பொழுது சீனிவாசன் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவர்களுடைய உறவினர்கள் கதிறி அழுதனர் மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக வடவாதிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன் என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது
    • ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, கோடந்தூர், பொறுப்பாறு, தளஞ்சி,தளிஞ்சிவயல்,ஈசல் தட்டு,குழிப்பட்டி, குருமலை, மேற்கு குருமலை, கருமுட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நிலையான வருமானம் இல்லாததால் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் வடுமாங்காய் பறித்தல்,தேன் எடுத்தல் போன்ற உயிரை பணயம் வைக்கும் சுய தொழில்களிலும் ஈடுபட வேண்டிய சூழல் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஈசல்தட்டு பகுதியில் சின்ன கூழையன்(வயது 65) என்பவர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சின்ன கூழையனை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி எடுத்து வந்தனர்.அவசரகால உதவிகள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. பிரசவம்,எதிர்பாராமல் நடக்கும் விபத்து,அவசர கால உதவியை பெறுவதற்கு வனப்பகுதி வழியாக பயணித்து அடிவாரத்தை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் உயிரை காக்கும் பொன்னான நேரம் வீணாகி விடுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வனப்பகுதியில் தொட்டில் கட்டி தூக்கி வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இதற்காக திடகாத்திரமான உடல்வாகு கொண்ட நபர்கள் தேவை. ஒரு உயிரை காப்பதற்கு பல உயிர்களையும் பணயம் வைத்து இந்த செயலை செய்து வருகின்றனர்.எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி வனப்பகுதியில் பாதை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் தேன்எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்ற உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் தொழில்களுக்கு தகுந்த உபகரணங்களும், விழிப்புணர்வும் வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் வாழ வேண்டும்.
    • ரத்ததானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண்தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ராசா மிராசுதார் மருத்துவமனை சமூக மருத்துவத் துறை, தமிழ்நாடு உடல் உறுப்புதான அறுவைசிகிச்சை துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பவா பிரசாரம்நிகழ்ச்சியின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது, ஆயுஷ்மான் பவா பிரசாரம் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடைபெறும். இன்று இரண்டாவது நிகழ்வாக செவிலியர் பயிற்ச்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடல் உறுப்புதான விழிப்புணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மக்கள் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இப்பேரணி அமைந்தது.

    இதன் மூலம் மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வகை செய்திட குருதி தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்றார்.

    இதில் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுப்புராம், இணைப்பேராசிரியர்கள் சிவச்சந்திரன், லியோ, உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    ×