என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை மருத்துவ கல்லூரி டீன் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி

    • மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து, பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் வாழ வேண்டும்.
    • ரத்ததானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண்தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, ராசா மிராசுதார் மருத்துவமனை சமூக மருத்துவத் துறை, தமிழ்நாடு உடல் உறுப்புதான அறுவைசிகிச்சை துறை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பவா பிரசாரம்நிகழ்ச்சியின் கீழ் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடக்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது, ஆயுஷ்மான் பவா பிரசாரம் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடைபெறும். இன்று இரண்டாவது நிகழ்வாக செவிலியர் பயிற்ச்சி பள்ளி மாணவிகளின் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உடல் உறுப்புதான விழிப்புணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மக்கள் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இப்பேரணி அமைந்தது.

    இதன் மூலம் மக்கள் உடல் உறுப்பு தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வகை செய்திட குருதி தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும். உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்றார்.

    இதில் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுப்புராம், இணைப்பேராசிரியர்கள் சிவச்சந்திரன், லியோ, உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×