என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகன் மாயம்:தந்தை போலீசில் புகார்
- கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
- பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கீழ் மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் ராஜசேகர் (வயது 32). இவர் கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டில் நடந்த தகராறில் தாக்கப்பட்டதாக கூறி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது தந்தை சிகாமணி இவருக்கு டீ வாங்கி வருவதற்காக எதிரே உள்ள டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகனை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜசேகரை தேடி வருகிறார்.
Next Story






