search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

    • படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
    • சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் வெடிவிபத்தில் காயமடை ந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரியலூர் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கி வர வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம்.

    தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறும் தொழில் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சி யர் இலக்கியா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் பொறுப்பு செல்வகுமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×