search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train service"

    • ரெயில்வேயில் பராமரிப்பு பணிகள்கள் நடந்து வருகிறது.
    • கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணி, 10 மணிக்கும், மதியம் 3.50 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், மாலை 6.35 மணிக்கும், இரவு 8.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கூடூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * ஆவடி-சென்டிரல் இடையே அதிகாலை 4.25 மணிக்கும், காலை 6.40 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரல்-ஆவடி இடையே இரவு 9.15 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கும், காலை 10.10 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும்.

    * சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும், இரவு 7.05 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எழவூர் வரை மட்டுமே செல்லும்.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 10 மணிக்கும், மதியம் 1.20 மணிக்கும், மதியம் 3.20 மணிக்கும். இரவு 8.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 11.35 மணிக்கும், மாலை 6.15 மணிக்கும், இரவு 9.40 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும்.

    * சூலூர்பேட்டை-வேளச்சேரி இடையே மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    வெளிப்பாளையம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில் இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது.

    சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இரண்டு முறை சோதனை செய்தனர். மேலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    பாம்பன் ரெயில் பாலத்தில் வருகிற 26-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.

    புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொல்கத்தாவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய புரளியால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Kolkata #Bomb
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் சீல்டா என்கிற பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதை ரெயில்வே ஊழியர் கண்டார்.

    உடனே இது குறித்து அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடப்பது வெடிகுண்டு என வேகமாக தகவல்கள் பரவின. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், யாரோ வேண்டுமென்றே புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தியதும், ரெயில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    தஞ்சாவூர்:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் இணைந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி மற்றும் காரைக் குடி பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரையில் தற்காலிகமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சை வழியாக சென்னைக்கு ஒரு விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை பணிகளுக்கு உடனடியாக தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு பகல் நேர ரெயில் சேவை இயக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் துணைப் பொதுச் செயலாளர் பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள் ஜான் கென்னடி, ரவிச்சந்திரன், மணி, செல்வம், நாகலெட்சுமி, கனகராஜ், ராஜசேகரன், இளைஞர் அணி மாநில செயலாளர் முருகசாமி, அமைப்பு செயலாளர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் கோபால், ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகையை வாழ வைப்போம் என்ற நோக்கில் திண்டுக்கல் மாவட்டம் பேரணைக்கு வரும் 1-ந் தேதி வருகை தர உள்ள அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கிளைகளை உருவாக்கி அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு பகல் நேர ரெயில் சேவையை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வைகை பாலமுருகன் நன்றி கூறினார்.

    சென்னை-கூடூர் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் இன்று மற்றும் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை-கூடூர் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை(திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்-ஆவடி இடையே மதியம் 2.05 மணிக்கும், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே மதியம் 2.50 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே காலை 11.30 மணிக்கும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே மதியம் 1.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில்(வண்டி எண்: 56037), விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் 3.30 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்படும்.

    மேலும் புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் சிறப்பு ரெயில்(56038) மாலை 5.50 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும். புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில்(56042), புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127), 2 மணி நேரம் ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்படும். எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்(16795), 2 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்திவைக்கப்படும். திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரெயில்(56041), 1.50 மணி நேரம் செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.

    இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 2.05 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் மதியம் 2.50 மணி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நெல்லூர்-சூலூர்பேட்டை காலை 10 மணி, சூலூர்பேட்டை-நெல்லூர் மதியம் 12 மணி ரெயில்கள் 1½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    விஜயவாடா-சென்னை சென்டிரல் பிற்பகல் 1 மணி பினாகினி எக்ஸ்பிரஸ் 1 மணி 20 நிமிடங்கள் தாமதமாகவும், இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து புறப்படும்போது 1 மணி நேரம் தாமதமாகவும் செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
    சென்னை:

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

    இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

    முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் இன்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.#Kashmir #suspendedtrains #generalstrike
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு மே 21-ம் தேதி பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும், ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவருமான மிர்வாய்ஸ் உமரின் தந்தை மிர்வாய்ஸ் பாரூக் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல 2002-ம் ஆண்டு மே 21-ம் தேதி மற்றொரு தலைவர் அப்துல் கனி லோன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மறைந்த 2 தலைவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தற்போதைய பிரிவினைவாத தலைவர்களான சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக், மற்றும் முகமது யாசீன் மாலிக் ஆகியோர் இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘காவல்துறையின் அறிவுரையின் அடிப்படையிலேயே ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

    சமீபத்தில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு, நேற்றுதான் மீண்டும் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmir #suspendedtrains #generalstrike
    ×