search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம்"

    • ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தில் இன்று மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்துள்ளன.

    துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
    • தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை.

    சென்னை தாம்பரம் மீனாம்பாள் தெருவில் வழக்கிறஞர் தியாகராஜன் என்பவர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது வீட்டின் கண்ணாடி உடைந்ததால் வீட்டிற்குள் இருந்த தியாகராஜன் மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

    விமானப்படை அலுவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் விரைந்துள்ளனர்.

    • ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.
    • கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    நெல்லை - தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (ரெயில் வண்டி எண் 06003/06004 ) சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரான ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.

    அதன்படி வரும் வருகிற நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கி ழமை) முதல் நெல்லை - தாம்பரம் ரெயிலும், 22-ந் தேதி தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம்- நெல்லை சிறப்பு ரெயிலும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு சங்கரன்கோவில் பகுதி பொதுமக்கள், பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • பாராளுமன்ற நிலைக்குழுவிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை மனு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையங் களின் மேம்பாடு குறித் தும், பயணிகளின் வசதி கள் குறித்து கேட்டறியவும் கன்னியாகுமரிக்கு வருகை தந்த நாடாளுமன்ற ரெயில்வே நிலை குழு உறுப் பினர்களுடன் விஜய்வசந்த் எம்.பி. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஆய்வை மேற் கொண்டார்.

    அப்போது கன்னி யாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் ரெயில்வே கோரிக்கை சம்பந்தமான மனுவினை நாடாளுமன்ற ரெயில்வே நிலைகுழு தலைவர் ராதா மோகனிடம் அவர் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நிலை யில் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக ரெயில்வே சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே அமைச்சகத்திடமும், தென் னக ரெயில்வே அதிகாரிக ளிடமும் எடுத்துக் கூறி வரும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக் கிறது.

    ரெயில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரெயிலை தின சரி ரெயிலாக இயக்க வேண் டும், வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் அதிவிரைவு ரெயிலை குமரி மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கு முன்பிருந்தது போல் குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண் டும். குழித்துறை ரெயில் நிலையத்தை கடந்து செல் லும் வகையில் மேம்பாலம், இரணியல் மற்றும் பள்ளியாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் டவுன் ரெயில் நிலையத்தில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.

    • நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    செங்கோட்டை:

    பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க அம்பாசமுத்திரம், ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06004) நெல்லையில் இருந்து வருகிற 18-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (06003) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும். இந்த ரெயில்களுக்கான முன் பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை 10 மணி நேரம் மின்சார ரெயில்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை சென்டிரல், எழும்பூரை அடுத்து தாம்பரம் மூன்றாவது முனையமாக இன்று திறக்கப்பட்டதுடன், நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.

    மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.

    16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் எல்.இ.டி விளக்கு, செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதிகளை கொண்டிருக்கும். இன்று மட்டும் 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில், நாளை முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் ரெயில் மாலை 3.30 மணியளவில் நெல்லைக்கு சென்றடையும். வாரத்தில் திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரெயிலில் ரூ.240 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×