என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம்-கன்னியாகுமரி இடையே நாளை சிறப்பு ரெயில்
- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னை:
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை 16-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் பகல் 1.25 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.
இந்த ரெயில் 17-ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறது. இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் 17, 18-ந்தேதியில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்று அடைகிறது. 18-ந்தேதி போத்தனூரில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.10 மணிக்கு சென்ட்ரல் வந்து அடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.






