என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chendur Express"

    • எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும். இந்த ரெயில் சென்னை பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இதே போல, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    அதே போல, வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை சென்னை எழும்பூருக்கு வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16102), மதுரை தேஜஸ் ரெயில் (22672), மன்னார்குடி மன்னை ரெயில் (16108), செந்தூர் அதிவிரைவு ரெயில் (20606), குருவாயூர் ரெயில் (16128) ஆகிய ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக, 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (16101), மதுரை (22671), மன்னார்குடி (16107), திருச்செந்தூர் (20605) மற்றும் குருவாயூருக்கு (16128) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை முதன்முதலாக மின்சார ரெயிலாக இயங்கியது.
    • நிகழ்ச்சியின் போது ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    நெல்லை-திருச்செந்தூர் இடை யிலான ரெயில் பாதை மின்சார பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை முதன்முதலாக மின்சார ரெயிலாக இயங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த ரெயிலுக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

    இனிப்பு வழங்கி

    ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது ரெயில் நிலைய அதிகாரி பொன் பலவேசம், ரெயில் என்ஜின் பைலட்டுகள் ஆகியோர் பொன்னாடை மூர்த்தி கவுரவிக்கப்பட்டனர். ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் முருகன், நிர்வாகிகள் சுகுமார், சுந்தர்ராஜ், கற்பக விநாயகம், அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், சீனிவாசன், டி.சி.டபிள்யு. நிறுவன காண்ட்ராக்டர்கள் சிவக்குமார், வெற்றிவேல் மற்றும் லிங்க பாண்டியன், சின்னதுரை, கந்தபழம், செல்வம், ஸ்ரீதர், பாரத், கருப்பசாமி, சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்தோணி தங்கராஜ் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    • ஜாக்சன், திடீரென செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜாக்சன்(வயது 36). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு சேரன் மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவ ருடன் திருமணமாகி தற்போது பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை மகாராஜநகர் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்த ஜாக்சன், திடீரென அந்த வழியாக வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஐகிரவுண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் ஜாக்சன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×