தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட பாலம் கைவிடப்படுகிறது

மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும்
தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட பாலம் கைவிடப்படுகிறது
Published on

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோயம்பே ட்டில் செயல்பட்டு வந்த பஸ்நிலையமும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்ககட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தது.

இதற்கிடையே தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு பதிலாக ஜி.எஸ்.டி.சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.

இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூ ருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல் மறைமலைநகர், போர்டு தொழி ற்சாலை, சிங்கப்பெ ருமாள்கோவில், மற்றும் மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இது 6 வழிப்பா தையாக அமைய உள்ளன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு விடிவு பிறக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com