என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே 17-ந்தேதி சிறப்பு ரெயில்கள்
    X

    தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே 17-ந்தேதி சிறப்பு ரெயில்கள்

    • ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
    • வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் சென்று பஸ் ஏறுவார்கள். இதனால் தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை அதிக கூட்ட நெரிசல் காணப்படும்.

    இதைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வருகிற 17-ந் தேதி 3 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7.45, 7.53, 8.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இதே போல் வருகிற 22-ந்தேதி தாம்பரம்-காட்டாங்கொளத்தூர் இடையே 5 பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி வருகிற 22-ந்தேதி காட்டாங்கொளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    Next Story
    ×