தாம்பரம்- கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.
தாம்பரம்- கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
Published on

சென்னை:

தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் 'தடம் எண் 55 பி' என்ற பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூர், கிரவுன் பேலஸ், அண்ணா நகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரெயில் நிலையம், ஆதனூர் பிரதான சாலை, வண்டலூர் பங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை வந்தடையும். இது போல கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

புறப்படும் நேரம்: இப்பஸ் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 7.30, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும் கிளாம்பாக்கத்தில் இருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com