என் மலர்

  செய்திகள்

  பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த பிரிவினைவாதிகள் - காஷ்மீரில் மீண்டும் ரெயில்கள் ரத்து
  X

  பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த பிரிவினைவாதிகள் - காஷ்மீரில் மீண்டும் ரெயில்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் இன்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.#Kashmir #suspendedtrains #generalstrike
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரில் கடந்த 1990-ம் ஆண்டு மே 21-ம் தேதி பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும், ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவருமான மிர்வாய்ஸ் உமரின் தந்தை மிர்வாய்ஸ் பாரூக் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல 2002-ம் ஆண்டு மே 21-ம் தேதி மற்றொரு தலைவர் அப்துல் கனி லோன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  மறைந்த 2 தலைவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தற்போதைய பிரிவினைவாத தலைவர்களான சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக், மற்றும் முகமது யாசீன் மாலிக் ஆகியோர் இன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

  இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் முக்கிய வழித்தடங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘காவல்துறையின் அறிவுரையின் அடிப்படையிலேயே ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

  சமீபத்தில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு, நேற்றுதான் மீண்டும் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmir #suspendedtrains #generalstrike
  Next Story
  ×