search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikudi"

    • பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளார் அமித்ஷா.

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடநதது.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் எம்.எல்.ஏ. மாங்குடி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத்தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், நகர்மன்ற கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி, மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீவித்யா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ்.ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி, அருணா, மணசை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், அமுதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுபதி, கணேசன், மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கிராண்ட் மாஸ்டரான பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 17). இவர் புதுவயல் வித்யாகிரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் சுவீடனில் நடந்த உலக செஸ் போட்டியில் பங்கேற்று 9 க்கு 8 புள்ளி பெற்று இந்தியாவின் 79 மற்றும் தமிழகத்தின் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

    இந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று முதல் முறையாக காரைக்குடிக்கு வந்த மாணவன் பிரனேசுக்கு காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் வித்யாகிரி பள்ளி தலைவர் நருவிழி கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    சக மாணவர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • மருத்துவ மாணவர்களை உருவாக்கும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளிகள்.
    • ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி-மானகிரியில் 2010-ம் ஆண்டு துவக்கப்பட்ட செட்டி நாடு பப்ளிக் பள்ளியானது இயற்கையான எழில்மிகு அமைதியான சூழலில் மாணவர் கற்றலுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியம் மிக்க சமூக மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும் பெயரைக் கொண்டு சிறப்பு மிக்க பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

    தனது 10-ம் ஆண்டில் காலடி வைத்து வெற்றிகரமாக அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. காரைக்குடியில் கல்விக்கு பெருமை சேர்த்த வள்ளல் அழகப்பரின் கல்விச்சேவையை மனதில் கொண்டு கற்றவர் போற்றும்படி, கேட்டவர் வியக்கும்படி மிகச்சிறந்த முறையில் சீரிய கல்விப் பணியாற்றி திறம்பட காரைக்குடி, மானகிரியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ரோட்டேரியன் குமரேசன்.

    பிரம்மாண்ட கட்டமைப்பு வசதியுடன் AC வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் என ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ISO 9001-2015 தரச்சான்று பெற்றுள்ளது. ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    பள்ளிக்கு வந்து செல்ல அனைத்து இடங்களுக்கும் நவீன AC பேருந்து வசதி உள்ளதால் மாணவர்கள் தங்கள் பயண நேரத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.பள்ளியிலேயே காலையும், மதியமும் அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகிறது. உண்ணும் பழக்க வழக்கங்களும் கற்றுத்தரப்படுகிறது.

    வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவரால் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நிரந்தர செவிலியர் சேவையும் பள்ளியிலேயே தகுந்த முறையில் கொடுக்கப்படுகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் பலர் NEET தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரி பயின்று வருகின்றனர் என்பது பள்ளியின் சிறப்பம்சமாகும். NEET தேர்வு மையமாகவும் செட்டி நாடு பப்ளிக் பள்ளி திகழ்ந்து வருகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் International School Award கிடைத்துள்ளது பெருமைக்குரியது. செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு 2022-2025 ஆண்டிற்கான International Dimension School (IDS) சான்றிதழை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மிகுந்த நட்புணர்வுடன் சிறந்த கற்பிக்கும் திறன் மிக்கவர்களையும் இருப்பது இப்பள்ளியின் சிறப்பு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு நோக்கத்துடன் கல்வி கற்பித்து வருகின்றனர். கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை மாணவ-மாணவிகளை உருவாக்கி வருகிறது செட்டிநாடு பப்ளிக் பள்ளி.

    • பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார்.முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், வருகிற ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.

    தி.மு.க. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதிய திட்டம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்துவிடுங்கள் என்றார்.

    மாநில இளைஞரணி துணை தலைவர் வேலங்குடி பாண்டித்துரை, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் உள்ளிட்ட பலரும் பேசினர்.

    தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகர தலைவர் பாண்டியன், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவி கோமதி நாச்சியார், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் சுரேஷ்நாத், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நிர்வாகி பூப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் இலுப்பகுடி நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.நகர துணை தலைவர் ஜோதிசண்முகம் நன்றி கூறினார்.

    • காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

    கஜா புயல் தாக்குதலில் 400 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் இருளில் மூழ்கின. #GajaCyclone
    காரைக்குடி:

    கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை புயல் புரட்டிப் போட்டுள்ளது.

    காரைக்குடி பொன் நகர், வள்ளலார் நகர், இலுப்பக்குடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் விடிய விடிய அவதிக்குள்ளானார்கள். இன்று காலையும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அனைத்து மின் கம்பங்களையும் சீரமைத்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என்றனர். இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மாவட்டத்தில் வருவாய்த் துறையினர், பொதுப் பணித்துறையினர், மின் வாரிய அமைப்பினர் என அனைத்து துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். ஆனாலும் பல இடங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் குருமல்லேஷ்பிரபு அறிவித்துள்ளார்.

    புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் சாய்ந்ததில் வள்ளலார் தெரு, பொன் நகர் பகுதி யில் பல வீடுகளின் காம்ப வுண்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. பொன் நகரில் தோட்டத்தில் இருந்த 15 தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரைக்குடியில் தொடர்ந்து மீட்பு பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருகின்றனர்.  #GajaCyclone



    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    தஞ்சாவூர்:

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், துணை தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் இணைந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கோட்டை- காரைக் குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி மற்றும் காரைக் குடி பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட ரெயில்போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அதுவரையில் தற்காலிகமாக பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி, திருச்சி, தஞ்சை வழியாக சென்னைக்கு ஒரு விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

    மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னார்குடி-பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், தஞ்சை-அரியலூர், கும்பகோணம்-விருத்தாச்சலம் அகல ரெயில் பாதை பணிகளுக்கு உடனடியாக தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaooruNammaGethu
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 7 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 2 புள்ளியுடன் உள்ளன. காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் எந்த புள்ளியும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஐடிரீம் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் வெற்றி எதுவும் பெறவில்லை. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அந்த அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி முதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் முதல் ஆட்டத்தில் 48 ரன்னில் தூத்துக்குடி அணியிடம் தோற்றது. எனவே அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaooruNammaGethu
    ×