search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி"

    • சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார்.
    • ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    காரைக்குடி:

    மனிதனுக்கு இரண்டு கண்கள் என்றால், சமூக வலைதளத்துக்கு பார்ப்பதெல்லாம் கண்கள்தான். பொது வெளியில் நடக்கும் சம்பவம் அடுத்த விநாடி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதில் ஈடுபட்ட நபரை கதிகலங்க வைத்து விடுகிறது. இதனால் சிக்கிக்கொண்டோரும், பிரபலமானவர்களும் பலர்.

    அதிலும் குறிப்பாக மது போதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், அதற்கு லைக் கொடுத்து, கருத்து சொல்பவர்களின் வார்த்தைகள் சவுக்கடிக்கு சமமாகவும் இருந்துள்ளது. வேடிக்கை, வினோதங்களின் மூலம் தங்களை ஈர்ப்பதற்காகவும் ஒருசிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த வகையில் செட்டி நாடு புகழ் காரைக்குடியிலும் ஒரு சம்பவம் அரங்கேறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியான காரைக்குடி அறந்தாங்கி செல்லும் சாலை நேற்று மாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அந்தி சாயும் மாலை வேளையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது போதையில் அந்த பகுதிக்கு வந்தார்.


    அரைக்கால் டவுசர், பனியன் அணிந்திருந்த அவர் வெயில் குறைந்த மழை வாசம் அடித்த குளுகுளு சாலையின் நடுவில் வீட்டின் படுக்கை அறையில் படுப்பது போன்று கால்மேல் கால் போட்டு படுத்துக் கொண்டார். மேலும் தனது டவுசர் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை பார்த்துக் கொண்டே அந்த சாலையை கடந்து சென்ற பெண்களை பார்த்து கேலி, கிண்டலும் செய்தார்.

    தலைக்கேறிய போதை, தடுமாற்றத்துடன் கூடிய நடை, போதைக்கு ஊறு காயாக கேலி, கிண்டல் வேறு என்று அந்த வாலிபரின் எல்லை அத்துமீறி போனது. பலர் வேடிக்கை பார்க்க, சிலர் செல்போன்களில் வீடியோ எடுக்க, இதெல்லாம் நமக்கு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் சென்றனர் மற்றும் பலர். அறிவுரை கூறி அப்புறப்படுத்த நினைத்து அருகில் சென்றவர்கள் அச்சத்துடன் திரும்பி வந்தனர்.

    ஏதாவது அசம்பாவித சம்பவத்தில் அவர் இறங்கினால் என்று எண்ணி, நமக்கேன் வம்பு வந்த வழியாக திரும்பினர். இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடந்து கொண்ட வாலிபரை அங்கிருந்து அனுப்பி வைக்க அதே பகுதியைச் சேர்ந்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.

    உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் யாரும் வர வில்லை. இதற்கிடையே சாலையில் நடுவில் படுத்திருந்த அந்த வாலிபர் எழுந்து ரோட்டில் அங்குமிங்கும் சென்றார். பின்னர் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் அவரது நண்பர்களை வரவழைத்து ஒருவழியாக போதை வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த ரகளையால் காரைக்குடி பர்மா காலனி சாலை சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறைகளை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின்படி முன்பு இருந்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சமாகவும், அந்த பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்து மாநகராட்சியாக மாற்றம் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை.பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகியான இவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில இலைஞரணி துணைத்தலைவராக அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் ஆசி பெற்று காரைக்குடிக்கு வந்த பாண்டித்துரைக்கு காரைக்குடி பா.ஜனதா சார்பில் சூரக்குடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் கழனிவாசல், பழைய பஸ் நிலையம், செக்காலை ரோடு, தேவர் சிலை, பர்மா காலனி, ஸ்ரீராம் நகர் வழியாக ஊர்வலமாக வேலங்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

    இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டியன், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், இளைஞரணி நகர தலைவர் முத்து பாண்டியராஜா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் ராஜாராமன், சுப்பையா, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் பாண்டிய நாராயணன், ஒன்றிய மகளிரணி தலைவி சீத்தாலெட்சுமி, பொதுச் செயலாளர்கள் பழனிக்குமார், மணிக்குமார், ஒன்றிய பொருளாளர் ஆவுடையப்பன், கோட்டை யூர் பேரூராட்சி கவுன்சிலர் திவ்யா பாண்டித்துரை, கானாடுகாத்தான் கவுன்சிலர் குமார், கோட்டை யூர் சோலை, குமரேசன், ரவீந்திரன், நாகஜோதி, அமைப்பு சாரா அணி மணிகண்டன், காரைக்குடி ஆட்டோ பாலா உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.வேலங்குடி கார்த்திகேயன் நன்றி கூறி னார்.

    ×