காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவிப்பு

காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில்  எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவிப்பு
Published on

காரைக்குடி

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com