search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisayanvilai"

    • திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உயிரிழந்தவர் காவி நிற வேட்டியும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் காவி நிற வேட்டி யும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார். மேலும் அவர் வண்ண பூ போட்ட கம்பளி போர்வையும் போர்த்தியவாறு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி சுந்தரமூர்த்தி வந்தார்
    • அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திசையன்விளை:

    திசையன்வினை அருகே உள்ள அழகப்பபுரத்தில் வட பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கோவில் நடை திறந்துகிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க பொட்டு செயின், தங்ககாசு, தங்ககம்மல், வெள்ளி கிரிடம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா முத்துசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • மாலை 6 மணிக்கு திசையன்விளையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.கவின் பொன் விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், அதன் முன்பு அலங்கரித்து வைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திசையன்விளையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் தலைமை நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு அவரவர் பகுதிகளில் கொடி ஏற்றியும், உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.
    • வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    திசையன்விளை:

    வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

    ஆசிரியை மரியரூயஅபராணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எலிசபெத் மாணவர்களின் கற்றல்திறன் வளர்ச்சிக் குறித்தும், பள்ளியின் சிறப்பு அம்சங்களின் விரிவாக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார்.

    பள்ளியின் தாளாளர் வி.எஸ். ஆர். ஜெகதீஸ் விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்து தெரிவித்து பேசினார்.

    அப்போது வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    • சரஸ்வதி நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
    • திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி பகுதியை அடுத்த பாப்பான்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.

    திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    • களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
    • நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    திசையன்விளை:

    களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்துவந்தனர்.

    நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தராஜ் ஓட்டி சென்றார். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திசையன்விளையை அடுத்த குமாரபுரம் அருகே சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பொத்தக் காலன் விளையை சேர்ந்த பிரான்சிஸ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தாயாரின் நினைவு நாளில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    திசையன்விளை:

    திசையன்விளை இசக்கி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி(வயது 42). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    இதனால் செந்தூர்பாண்டி மன வேதனையில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு அவரது தாயார் ராஜபூபதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு நேற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் காரணமாகவும் செந்தூர்பாண்டி யாருடன் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

    • திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், ராதாபுரம் வட்டார கிராமபுற வளர்ச்சி அலுவலர் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட இயக்குனர் பழனி மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவதற்கான தலா 2 குப்பை தொட்டிகளை 300பேருக்கு வழங்கினார்.

    விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப் பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழாவில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தங்கம், உறுப்பினர்கள் வரத குணபாண்டியன், கவிதா, கிருஷ்ணவதி, ஜெயபால், பாலசரஸ்வதி, ஜெயராஜ், சமுக சேவகர் சரவணகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளை பயிரிட்டுள்ளார்.
    • திடீரென மின்கம்பிகள் உரசி தீப்பொறி உருவாகி சுமார் 500 வாழைகள் தீயில் கருகின.

    பணகுடி:

    திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏழோடை என்னும் பகுதியில் தத்துவனேரியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது தோட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் வாழை பயிரிட்டு வரும் இடத்திற்கு மேல் மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி உருவாகி சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீப்பிடித்து தீயில் கருகின.

    மேலும் அருகில் இருந்த 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மேலும் தீ வராமல் இருக்க தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகவும், ரூ.2 லட்சம் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயி வெற்றிவேல் வேதனையுடன் தெரிவித்தார்.

    • மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமிற்கு திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாட்டுநல பணி திட்ட அலுவலர் யூகேஷ்வர வேற்று பேசினார். போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் பெருமாள், செண்பகவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர்.

    முகாமில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், சங்க செயலாளர் ஜெயராமன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.


    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் அப்புவிளையில் கபடி போட்டி நடக்கிறது.
    • இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி. எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 80 அணிகள் பங்கேற்க உள்ளனர் நேற்று இரவு ஆண்கள் பிரிவில் நடந்த விளையாட்டு போட்டியில் கூடங்குளம் அணியும், குஜராத் அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. கூடங்குளம் அணி 29 புள்ளிகள் பெற்றது.பெண்கள் அணியில் குஜராத் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் விளையாடியது.

    இதில் குஜராத் அணி 27 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. அமெரிக்க கல்லூரி அணி 26 புள்ளிகள் பெற்றது. நேற்று மாலையில் வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதி வழியாக சென்று விளையாட்டு மைதானத்தை அடைந்தது.

    குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி சரவணகுமார், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நெல்லை மேயர் சரவணன், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் நாளை 14-ந் தேதி ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது.தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
    • நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி பஞ்சாயத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் கரைசுத்து நல்வலடி, கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி, உவரி, முதுமொத்தன்மொழி, திருவம்பலபுரம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நல்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் அதன் தலைவர் ராதிகா சரவணக்குமார் தலைமையில் நடந்தது. கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையா முன்னிலை வகித்தார். சரவணகுமார் வரவேற்றார்.

    மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா, பாண்டிராணி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் இசைக்குமார் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×