திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மோதல்- கொத்தனார் பலி

களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் மோதல்- கொத்தனார் பலி
Published on

திசையன்விளை:

களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்துவந்தனர்.

நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தராஜ் ஓட்டி சென்றார். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திசையன்விளையை அடுத்த குமாரபுரம் அருகே சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பொத்தக் காலன் விளையை சேர்ந்த பிரான்சிஸ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com