வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை - 2 நாட்கள் நடக்கிறது

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது. வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில்   பள்ளியின் தாளாளர்  வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசிய காட்சி.
மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பேசிய காட்சி.
Published on

திசையன்விளை:

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியை மரியரூயஅபராணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எலிசபெத் மாணவர்களின் கற்றல்திறன் வளர்ச்சிக் குறித்தும், பள்ளியின் சிறப்பு அம்சங்களின் விரிவாக்கம் குறித்தும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார்.

பள்ளியின் தாளாளர் வி.எஸ். ஆர். ஜெகதீஸ் விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் குறித்து தெரிவித்து பேசினார்.

அப்போது வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com