search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisayanvilai"

    • காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.
    • அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது.

    திசையன்விளை:

    காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரைன் கல்லூரிகளுக்கு இடையிலான பி.எஸ்.சி. நாட்டிக்கல் பிரிவுக்கான (கப்பல் கேப்டன்) இறுதி தேர்வு நடைபெற்றது.

    அதில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்த திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிசான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவர் ஜிஸ்னுமோன்னை கல்லூரி தாளாளர் வி.எஸ்.கணேசன், செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ், கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி மற்றும் கேப்டன்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    ராதாபுரம் யூனியன் ஆணையாளர் விமலா பிளாரன்ஸ், குமார புரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் அனிஷா பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் வாள் வாண்டி ஈஸ்வரி அம்மன்கோவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 11 கிராம் எடைகொண்ட 3 பொட்டு தாலிகள், கோவில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 ஜோடி கண்மலர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக கோவில் நிர்வாகி கந்தசாமி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மூன்றடைப்பு முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனர்.

    • திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.
    • மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.

    சிவகாமி குத்து விளக்கு ஏற்றிவைத்தார். ராமநாம சிறப்பு பற்றி முத்தரசி, சுயம்புகனி ஆகியோர் பேசினர். மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேனகா, கஸ்தூரி, பிரிந்தா, அமுதா ஆகியோர் சுலோகங்கள் சொல்லி ராமர் சிலைக்கு மலர்களால் அர்சனை செய்தனர். பராசக்தி முருகேசன் ஆரத்தி எடுத்தார்.

    இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை திசையன்விளை இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் கொடி ராஜகோபால், செயலாளர் மணிமண்டன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திசையன்விளை அருகே உள்ள காரம் பாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
    • விழா நாட்களில் ஆலயத்தில் திருப்பலி, பல்வேறு சபைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள காரம் பாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. மன்னார்புரம் பங்குதந்தை எட்வர்ட் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். விழா நாட்களில் ஆலயத்தில் திருப்பலி, பல்வேறு சபைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருவிழா அன்று மாலை ஆராதனையும் சப்பர பவனியும் நடந்தது. 10-ம் திருவிழாவில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், சப்பர பவனி, விளையாட்டு போட்டிகள், அசனம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி டக்ளஸ் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

    • திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்டைக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

    திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் சாந்தி மருத்துவமனை அருகில் உள்ள ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்ைடக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கெனிஸ்டன், இசக்கிபாபு, பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ஜேகர், வைகுண்டம், பொன்இசக்கி, முருகேசன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, நரேஷ் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சி யார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
    • நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வ மருதூரை சேர்ந்தவர் ஜான் ஷாபிவி (வயது 48). விவாகரத்து ஆனவர்.

    பிணமாக கிடந்தார்

    இவர் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று ஜான் ஷாபிவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த நகைகள் காணவில்லை. காதில் ரத்தகாயம் இருந்தது இதுகுறித்து திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர்ஸ்டீபன் ஜோஸ் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜான் ஷாபிவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக ஜான் ஷாபி வி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் அவரது உறவினரான அப்துல்காதர் (வயது 45) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் ஜான் ஷாபிவி அணிந்தி ருந்த நகையின் ஒரு பகுதி இருந்துள்ளது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் ஜான் ஷாபிவியை கொலை செய்ததை ஒப்புகொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர் போலீசாரி டம் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    கழுத்தை நெரித்து கொலை

    பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் நடந்த கந்தூரி விழாவில் கலந்து கொள்ள பள்ளிவாசல் தெருவில் உள்ள பெரும்பா லானவர்கள் சென்று விட்டனர். நான் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு ஜான் ஷாபிவி வீட்டுக்கு சென்று அவரிடம் நகைகளை இரவல் கேட்டேன்.

    அவர் தரமறுத்தார் அதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த நகைகளையும், அவர் பயன்படுத்திய செல்போன் மெமரி கார்டையும் எடுத்து கொண்டு சென்றேன் மெமரி கார்டை தீயிட்டு கொழுத்திவிட்டு நகைகளை திசையன்விளை - நான்கு நேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் மண்ணில் புதைத்து வைத்தேன். அதில் சிறிதளவு நகை என் பேண்ட் பாக்கெட்டில் இருந்துள்ளது. அதை வைத்து என்னை கண்டு பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

    • திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன். பால் வியாபாரி.
    • பின்னர் அன்று இரவில் வீடு திரும்பிய அவர்கள் சுமார் 15 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் இருந்த ரகசிய பகுதியில் வைத்து பூட்டி உள்ளனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 45). பால் வியாபாரி.

    நகை மாயம்

    அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர். இதற்கான கன்னிபூஜை கடந்த 21-ந்தேதி நடந்துள்ளது. அதில் பங்கேற்பதற்காக சரவணன் குடும்பத்தால் நகைகள் அணிந்து சென்றுள்ளனர்.

    பின்னர் அன்று இரவில் வீடு திரும்பிய அவர்கள் சுமார் 15 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் இருந்த ரகசிய பகுதியில் வைத்து பூட்டி உள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த நகைகளை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திசையன்விளை போலீசில் புகார் அளித்தனர்.

    விசாரணை

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை வைக்கப்பட்டு இருந்த பீரோவில் வேறு எந்த பொருட்களும் திருடப்படவில்லை.

    எனவே அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்பவர்கள், நகை வைக்கப்படும் இடத்தை அறிந்தவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் பள்ளியில் 10- ம் வகுப்பு பயிலும் மாணவி லாவண்யா பாஸ்கர், கடந்த நவம்பர் மாதம் உலக அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் 100 சதவீத தேர்ச்சியில் முதலிடம் பெற்று உலக சாதனை செய்துள்ளார்.

    இந்த தேர்வில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300 பள்ளிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யாபாஸ்கர் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். உடன்குடி கிராமத்தை சேர்ந்த லாவண்யா - பாஸ்கர் என்பவரது மகள் ஆவார். அவர் தற்போது சவுதியில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் மாணவி லாவண்யாவுக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தி னார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவியை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது. இதற்காக காலை 6 மணி முதல் சிறப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவிக்கு சபாநாயகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துள்ளனர்.

    • கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், வழங்கினார்.

    திசையன்விளை:

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இடையன்குடி எலைசா கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பாக 13-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 32- க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.இந்த போட்டி 6 நாட்களாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரின் பரிசளிப்பு விழாவிற்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கினார்.

    விழாவிற்கு இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற உடன்குடி தேரியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பரிசுத்தொகை ரூ.20,013, சுழற்கோப்பையினையும், 2-ம் பரிசை எம்.எம். அணிக்கு ரூ.15,013, சுழற்கோப்பையும் வழங்கினார். 3-வது பரிசை ஐ- மேக்ஸ் ஸ்போர்ட் கிளப் அணிக்கு ரூ.10,013 பரிசுத் தொகையும், சுழற்கோப்பையும், ராதா புரம் ஊராட்சி மன்ற கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இடையங்குடி ஜெபகுமார், ராம் கிஷோர் பாண்டியன், சங்கர்,எழில் ஜோசப், குமார், முத்தையா,சுகுமார் ஜெபதுரை,சுகிர்தராஜ், பவுல், ரமேஷ், தேவ அலெக்ஸ் அருள், சாம், ரமேஷ், கணிபாய், அமுதன், ஜெபகுமர், ராஜா, சுஜா, வினோகார், ரூபன் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விளையாட்டு போட்டிகளை பழைய மாணவர் பாலஸ்ராஜன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜேகர் முன்னிலை வகித்தார். சேகரகுரு பர்னபாஸ் ஜெபம் செய்தார்.

    திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான், ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்பு சிவமதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர். விழா மலரை வில்சன் ஆனந்தராஜ் வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார். சங்க பொதுச்செயலாளர் சாமுவேல் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஜெபதாமஸ் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் சாத்ராக்ஞானதாசன் வரவேற்று பேசினார். விழாவில் திரளான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலையில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலரும் தே.மு.தி.க. நகர செயலாளருமான நடேஷ் அரவிந்த் உள்பட 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
    • இளைஞர் அணி ,மகளிர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    திசையன்விளை:

    தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞான திரவியம் எம்.பி. மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னி லையில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலரும் தே.மு.தி.க. நகர செய லாளருமான நடேஷ் அரவிந்த் உள்பட 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். அதன்படி தன்னுடன் தே.மு.தி.க. நகரப் பொருளாளர் எமர்சன், ஞானம், நகர அவை தலைவர் மகேஸ்வரன், நகர துணைச் செயலாளர் அஜீஸ், மன்ற செயலாளர் கலை ஈஸ்வரன், மன்ற துணை செயலாளர் மணி, நகர இளைஞரணி செயலாளர் ஜோயல், ேத.மு.தி.க. நகர இளைஞரணி துணைச் செயலாளர் ராம்ஸ், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, நகர மகளிர் அணி துணைச்செயலாளர் பிச்சம்மாள், முருகம்மாள் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தா ண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ராஜசேகர், திசையன்விளை முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், சங்கர் , எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, குமார், ஸ்டான்லி, முத்தையா, சுடலை மணி, டென்னிஸ், சாலமோன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×