search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pray for Rain"

    • விவசாயம் கடும் பாதிப்பால் மழை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
    • மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. வழக்கம் போல பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். அவ்வப்போது பெயரளவில் சாரல் மழை பெய்வதாலும் வெப்ப சலனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும் எந்த அளவு இருக்குமோ? என்ற கலக்கத் தில் விவசாயிகள் விவசாய பணிகளில் இன்னும் முழு மூச்சாக இறங்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வயல்களில் விதைகளை பாவி, அவை நாற்றுக்களாக வளர்ந்து உள்ளது. அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடி யாமல் அப்படியே விடவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லா மல் குளம், ஊரணி மற்றும் வீடுகளில் உள்ள கிணறு களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்ணாமூச்சி காட்டும் மழையால் கலக்கத் தில் விவசாயிகள் உள்ளனர்.

    இதை தொடர்ந்து மழை வேண்டி கோவில், பள்ளி வாசல், தர்கா, தேவால யங்களில் சிறப்பு பிரார்த் தனை, தொழுகை நடந்து வருகிறது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரு கின்றனர்.

    இன்னும் சில நாட்களில் மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    • பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் இந்த அம்மன் கோவிலில் திருவிழா, நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி கூழ் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். சக்தி வாய்ந்த தெய்வமான முத்து மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளதால் நல்ல மழை பெய்து வறட்சி நீங்கி வளம் கொழிக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.
    • மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அப்புவிளை மாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நவமியை முன்னிட்டு நேற்று மாலை ராமஜெப வழிபாடு நடந்தது.

    சிவகாமி குத்து விளக்கு ஏற்றிவைத்தார். ராமநாம சிறப்பு பற்றி முத்தரசி, சுயம்புகனி ஆகியோர் பேசினர். மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேனகா, கஸ்தூரி, பிரிந்தா, அமுதா ஆகியோர் சுலோகங்கள் சொல்லி ராமர் சிலைக்கு மலர்களால் அர்சனை செய்தனர். பராசக்தி முருகேசன் ஆரத்தி எடுத்தார்.

    இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை திசையன்விளை இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் கொடி ராஜகோபால், செயலாளர் மணிமண்டன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×