search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயம் கடும் பாதிப்பு; மழை வேண்டி பிரார்த்தனை
    X

    விவசாயம் கடும் பாதிப்பு; மழை வேண்டி பிரார்த்தனை

    • விவசாயம் கடும் பாதிப்பால் மழை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்தனர்.
    • மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைய வில்லை. வழக்கம் போல பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். அவ்வப்போது பெயரளவில் சாரல் மழை பெய்வதாலும் வெப்ப சலனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவ மழையும் எந்த அளவு இருக்குமோ? என்ற கலக்கத் தில் விவசாயிகள் விவசாய பணிகளில் இன்னும் முழு மூச்சாக இறங்கவில்லை. ஒரு சிலர் மட்டும் வயல்களில் விதைகளை பாவி, அவை நாற்றுக்களாக வளர்ந்து உள்ளது. அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடி யாமல் அப்படியே விடவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லா மல் குளம், ஊரணி மற்றும் வீடுகளில் உள்ள கிணறு களிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கண்ணாமூச்சி காட்டும் மழையால் கலக்கத் தில் விவசாயிகள் உள்ளனர்.

    இதை தொடர்ந்து மழை வேண்டி கோவில், பள்ளி வாசல், தர்கா, தேவால யங்களில் சிறப்பு பிரார்த் தனை, தொழுகை நடந்து வருகிறது. இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரு கின்றனர்.

    இன்னும் சில நாட்களில் மழைக்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே விவசாய பணிகளை முழு மனதோடு செய்ய முடியும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    Next Story
    ×