search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat School"

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற முப்பெரும் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
    • இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற முப்பெரும் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆடல், பாடல், பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி, வட்டார வள மேற்பார்வையாளர் காசிநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணராஜ், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் தங்கம், ரமேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்சவள்ளி ராஜேந்திரன், ஆசிரியர் சுந்தரம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாரதி மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலரகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    ராதாபுரம் யூனியன் ஆணையாளர் விமலா பிளாரன்ஸ், குமார புரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் அனிஷா பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கலந்து கொண்டு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றியும், குழந்தைகளுடைய வளர்ப்பு பற்றியும் எடுத்து கூறினார்.அப்போது காவல்துறையினர் 24 மணி நேரமும் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் பெற்றோர்கள் தரப்பில் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றனர். பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர். ஒரு சில குழந்தைகள் பள்ளி நேரத்திற்கு அதிக நேரம் முன்பே வந்து விடுகின்றனர். அதனால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளை சரியான பள்ளி நேரத்திற்கு மட்டும் தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். மாதந்தோறும் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், வக்கீல் வி.கந்தசரவணகுமார் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வி. விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ×