search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க. கவுன்சிலர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்
    X

    தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலையில் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்த போது எடுத்தபடம்.

    தே.மு.தி.க. கவுன்சிலர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்

    • ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலையில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலரும் தே.மு.தி.க. நகர செயலாளருமான நடேஷ் அரவிந்த் உள்பட 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
    • இளைஞர் அணி ,மகளிர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    திசையன்விளை:

    தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஞான திரவியம் எம்.பி. மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னி லையில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலரும் தே.மு.தி.க. நகர செய லாளருமான நடேஷ் அரவிந்த் உள்பட 100-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். அதன்படி தன்னுடன் தே.மு.தி.க. நகரப் பொருளாளர் எமர்சன், ஞானம், நகர அவை தலைவர் மகேஸ்வரன், நகர துணைச் செயலாளர் அஜீஸ், மன்ற செயலாளர் கலை ஈஸ்வரன், மன்ற துணை செயலாளர் மணி, நகர இளைஞரணி செயலாளர் ஜோயல், ேத.மு.தி.க. நகர இளைஞரணி துணைச் செயலாளர் ராம்ஸ், மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, நகர மகளிர் அணி துணைச்செயலாளர் பிச்சம்மாள், முருகம்மாள் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தா ண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ராஜசேகர், திசையன்விளை முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர் பாண்டியன், சங்கர் , எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, குமார், ஸ்டான்லி, முத்தையா, சுடலை மணி, டென்னிஸ், சாலமோன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×