search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Gift Package"

    • அனைவருக்கும் பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டு கடந்த 9ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடிமை பொருள் வழங்கலோடு விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அரிசி பெறும் கார்டுதாரர் அனைவருக்கும் பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டு கடந்த 9ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு முன் வரை 97 சதவீதம் பேருக்கு அதாவது 7 லட்சத்து 70 ஆயிரத்து 914 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு பொங்கலுக்குப்பின் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூரில் உள்ள ரேஷன்கடைகளில் வழக்கமான குடிமை பொருள் வழங்கலோடு விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் விடுபட்ட அனைவருக்கும் தொகுப்பு வழங்கி முடிக்க ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் 26,130 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டி உள்ளது.

    • பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.
    • பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    எந்தவித விமர்சனமும் ஏற்படாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தரமான பச்சரிசி தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் விரைந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மொத்தம் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 791 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 98 சதவீதமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக தென்சென்னையில் 94 சதவீதம் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்னும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 332 பேருக்கு மட்டுமே பரிசு தொகுப்பு வழங்க வேண்டியது உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தினால்தான் பரிசு தொகுப்பை வழங்க முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    குறிப்பாக பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
    • சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சரின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின்படி சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. சங்க தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவரும் மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவருமான திருஞானம், சிவகிரி நகர தி.மு.க. செயலாளரும் சங்க இயக்குநருமான டாக்டர் செண்பகவிநாயகம், சங்க இயக்குநர்கள் மாரித்துரை, விநாயகர், திருமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகி செல்லப்பா ஆகியோர் வரவேற்று பேசினர்.

    தென்காசி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சிவகிரி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமி ராமன், தி.மு.க. மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் மருதப்பன், மருத்துவர் அணி டாக்டர் சுமதி, நெசவாளர் அணி சி.எஸ்.மணி, மாணவர் அணி சுந்தர வடிவேலு, சங்க முன்னாள் தலைவர் பூமிநாதன், சிவகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, ரத்தின ராஜ், முத்துலட்சுமி தங்கராஜ் மற்றும் நகர தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி செல்வக்குமார் நன்றி கூறினார்.

    • திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்டைக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

    திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் சாந்தி மருத்துவமனை அருகில் உள்ள ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்ைடக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கெனிஸ்டன், இசக்கிபாபு, பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ஜேகர், வைகுண்டம், பொன்இசக்கி, முருகேசன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, நரேஷ் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சி யார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.
    • நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2023-ம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 (ரூபாய் ஆயிரம்) ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பண விநியோகப் பணியினை 9.1.2023- ந் தேதி அன்று தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள 7.96 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 310 குடும்பங்களுக்கும், விடுதலின்றி சுழற்சி முறையில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

    நியாய விலைக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும் விபரம், கிராமம் ,தெருவின் பெயர் மற்றும் நாள் ஆகிய விபரங்கள் குறித்த டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் விற்பனையாளர் மூலம் வழங்கப்படும்.

    அவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் அறிவிப்பு பலகை மூலம் அறிவிப்பாக தெரிவிக்கப்படும். பொங்கல் பரிசு நியாய விலைக்கடை விற்பனை முனைய எந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். அதன்படி, குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும், தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    அனைத்து நியாய விலைக்கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், பொங்கல் பரிசுப் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் : 1967 மற்றும் 1800 425 5901, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 0421-2971116, மாவட்டவழங்கள் அலுவலர் : 94450 00407, 73387 20335,துணைப்பதிவாளர், (பொதுவிநியோகத்திட்டம்) :தனிவட்டாட்சியர், திருப்பூர் வடக்கு : 94450 00257, தனிவட்டாட்சியர், உடுமலைப்பேட்டை : 94450 00254, வட்டவழங்கல் அலுவலர், அவினாசி : 94450 00255, 00255, வட்டவழங்கல் அலுவலர், பல்லடம் : 94450 00256, வட்டவழங்கல் அலுவலர், திருப்பூர் தெற்கு : 94457 96462, வட்டவழங்கல் அலுவலர், மடத்துக்குளம் : 9445796409, வட்டவழங்கல் அலுவலர், தாராபுரம் : 94450 00244, வட்டவழங்கல் அலுவலர், காங்கயம் : 94450 00243, வட்டவழங்கல் அலுவலர், ஊத்துக்குளி : 94457 96463 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் பணி இன்று தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.

    • கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர்.
    • அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

    இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது.

    அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றே பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம். டோக்கன் வழங்கியதும் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த மாதம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.
    • ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் முழு கரும்பு கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதில் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி 1 கரும்புக்கு போக்குவரத்து செலவு உள்பட அதிகபட்சமாக 33 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்று கூட்டுறவு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (வெட்டு கூலி, விவசாயிகளுக்கு வழங்கும் தொகை, ஏற்றி இறக்கும் செலவு உள்பட) அதுமட்டுமின்றி பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக்கூடாது.

    அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பில் இருந்து எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது.

    கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை குழுக்கள் அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னையை பொறுத்தவரை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கொள்முதல் செய்யும் போது சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் இருந்து ஒட்டுமொத்த கொள்முதலையும் மேற்கொள்ளக் கூடாது. மாறாக அந்த கிராமம் முழுவதிலும் பரவலாக கரும்பின் தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்க கூடாது.

    எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக்கூடாது. கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மட்டுமே வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

    கரும்பு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் எதிர்வரும் 2023 ஜனவரி 9-ந்தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். எந்தந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் அது தேவையற்ற புகார்களுக்கு வழிவகுக்கும்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட கலெக்டர்களே பொறுப்பு என்றும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனித்து அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • கரும்புடன் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
    • கரும்புடன் பொங்கல் பரிசு வழங்க கோரி வழக்கு, மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 22-ந்தேதி அறிவித்தது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பண்ணவயல் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெய்சதீஷ் (தெற்கு), சதீஷ்குமார் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா வரவேற்றார்.

    இதில் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் பூண்டி வெங்கடேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட துணை தலைவர் போர்வாழ் கோவிந்தராஜ், மருத்துவர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யம்பெருமாள் நன்றி கூறினார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

    இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×