என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் சேர்க்க வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
    X

    தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் சேர்க்க வலியுறுத்தி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

    • திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    திருச்சி:

    தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×