search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Olympiad English Test"

    • முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் பள்ளியில் 10- ம் வகுப்பு பயிலும் மாணவி லாவண்யா பாஸ்கர், கடந்த நவம்பர் மாதம் உலக அளவில் நடைபெற்ற ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் 100 சதவீத தேர்ச்சியில் முதலிடம் பெற்று உலக சாதனை செய்துள்ளார்.

    இந்த தேர்வில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300 பள்ளிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யாபாஸ்கர் தேசிய, மாநில, மாவட்ட மற்றும் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    முதலிடம் பெற்ற மாணவி லாவண்யாபாஸ்கர், முதல்கட்ட தேர்வில் முன்னேறி உலகளாவிய 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். உடன்குடி கிராமத்தை சேர்ந்த லாவண்யா - பாஸ்கர் என்பவரது மகள் ஆவார். அவர் தற்போது சவுதியில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் மாணவி லாவண்யாவுக்கு கேடயம் வழங்கி கவுரவப்படுத்தி னார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் மற்றும் முதல்வர் பாத்திமா எலிசபெத் மாணவியை பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது. இதற்காக காலை 6 மணி முதல் சிறப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவிக்கு சபாநாயகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர் உள்பட பலர் கலந்துள்ளனர்.

    ×