search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudalai Andavar temple"

    • விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது.

    திசையன்விளை:

    பிரசித்தி பெற்ற திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள் கலர் கோலப்போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்சியாக நேற்று அன்னபூஜையுடன் விழா தொடங்கியது. காலை 11 மணிக்கு மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க குதிரைகள் முன் செல்லமுத்து குடைபவனி வர மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது.

    தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு தொடர் அன்னதானம் நடந்தது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவு கரகாட்டம், மகுட ஆட்டம், வில்லிசை, பரிசளிப்பு விழா, சிலம்பாட்டம், பொம்மலாட்டம் பேஷன் ஷோ, முன்னாள் அரசு வக்கில் பழனி சங்கர் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை திறன் போட்டி, நள்ளிரவு சுவாமிக்கு விசேச அலங்கார பூஜை, சுவாமி வேட்டைக்கு செல்லுதல், சுவாமி முட்டை விளையாட்டு உள்பட பல்வேறு நிகழ்சிகள் அதிகாலை வரை நடந்தது.

    விழாவில் ஸ்டார் சேம்பர் பிரிக்ஸ் ஏ.எஸ். குமார், கே.ஆர்.பி. டிரேடர்ஸ் என்ஜினீயர் கனகராஜ், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி, டி.கே. ராஜா அண்ணாமலை, தங்கையா சுவிட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம். குமார், ஆகாஷ், முன்னாள் அரசு கூடுதல் வக்கீல் பழனிசங்கர், ரோட்டரி அட்வகேட் கில்டா பழனிசங்கர், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், தொழில் அதிபர் சரவணக்குமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி தலைவர் கமலா சுயம்புராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.

    • கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.
    • இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. 2-ம் நாள் கொடைவிழாவான நேற்று இரவு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது.

    கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் தலைமை யில் திசையன்விளை பேரூராட்சி தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கியதாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கிவைத்தார்.

    கோவில் முன்மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர். விழாவில் தொழில் அதிபர்கள் தங்கையா கணேசன், கே.டி.பி.ஆர்.திவாகர், பாஸ்கர், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்ப லெட்சுமி கனகராஜ், கடை வியா பாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    கொடைவிழாவில் இன்று மாலை 1008 திருவிளக்குபூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, சுடலை ஆண்டவர் இந்து மறுமலர்ச்சி மன்றம் சார்பில் மெகா மியூசிக் நைட் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழா தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகி சேம்பர்செல்வராஜ் செய்துள்ளார்.

    • பரமன்குறிச்சிஅருகே உள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    பரமன்குறிச்சிஅருகே உள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை திருச்செந்துரில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மானாடு விஸ்வகுல அக்க சாலை விநாயகர் கோவிலில் தீபாராதனை, இரவு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப கலசம் ஏற்றி தீபாராதனை நடந்தது. 2-ம் நாள்அதிகாலை சுவாமி ஊர்சுற்றி வருதல், மதியம் 12மணிக்கு சுவாமிக்கு அலங்காரதீபாராதனை, மாலையில் பக்தர்கள் பொங்கலிடுதல், இரவு 12மணிக்கு கணியான் ஆட்டம், வில்லிசை, அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 2 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு படைப்பு, தீபாராதனைக்குப்பின் தீரளை கொடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்செந்தூர் மானாடு கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உயிரிழந்தவர் காவி நிற வேட்டியும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்கு தெருவில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் காவி நிற வேட்டி யும், வெளிர் மஞ்சள் நிற அரை கை சட்டையும் அணிந்திருந்தார். மேலும் அவர் வண்ண பூ போட்ட கம்பளி போர்வையும் போர்த்தியவாறு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×