சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

பரமன்குறிச்சிஅருகே உள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா நடைபெற்றது.விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
Published on

உடன்குடி:

பரமன்குறிச்சிஅருகே உள்ள மானாடு விஸ்வகுல கருப்பசாமி சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முதல் நாள் மாலை திருச்செந்துரில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து மானாடு விஸ்வகுல அக்க சாலை விநாயகர் கோவிலில் தீபாராதனை, இரவு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்ப கலசம் ஏற்றி தீபாராதனை நடந்தது. 2-ம் நாள்அதிகாலை சுவாமி ஊர்சுற்றி வருதல், மதியம் 12மணிக்கு சுவாமிக்கு அலங்காரதீபாராதனை, மாலையில் பக்தர்கள் பொங்கலிடுதல், இரவு 12மணிக்கு கணியான் ஆட்டம், வில்லிசை, அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 2 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு படைப்பு, தீபாராதனைக்குப்பின் தீரளை கொடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருச்செந்தூர் மானாடு கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com