search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvarur"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 8-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கஜா புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Puducherry
    புதுச்சேரி :

    கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.  இதனிடையே புதுச்சேரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள 5 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Puducherry
    கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருவாருர் மாவட்டத்தில் உள்ள 5 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Thriuvarur
    திருவாரூர்:

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள 5 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளி செயல்படும் பள்ளிகளில்  முகாம் இருந்தால் நாளை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Thiruvarur
    திருவாரூர் மாவட்டத்தில் இன்று புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த ஆளுநர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றபோது அவரது காரை மறிக்க பொதுமக்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur
    திருவாரூர்:

    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தைக் கடந்து சென்றபோது அவரது காரை மறிக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தனர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. பின்னால் அதிகாரிகள் வந்த காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



    புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #GajaCyclone  #BanwarilalPurohit #Thiruvarur

    தமிழகத்தில் கஜா புயல் பதம்பார்த்த நிலையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    சென்னை:

    கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் வீரராகவ ராக் தெரிவித்துள்ளார்.

    புயல் பாதிப்பு சீரமைப்பு முடியாத நிலையில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மேற்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

    #GajaCyclone #Gajastorm 
    தமிழகத்தில் கஜா புயல் பதம்பார்த்த நிலையில், திருவாரூர், நாகை, கொடைக்கானல், புதுக்கோட்டை, தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    சென்னை:

    கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மறுசீரமைப்பு நிறைவடையாத பகுதிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகமே விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியர்கள் இன்று கண்டிப்பாக பள்ளிகளுக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து திண்டுக்கல் ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் நவ.26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm 
    சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    திருவாரூர்:

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வந்து பள்ளிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

    இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். #GajaCyclone
    கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக தேனி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaCyclone
    தேனி:

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone
    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    ×