என் மலர்

    நீங்கள் தேடியது "closed"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது.
    • கடந்த 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சப்பள்ளி ஊராட்சி 5 கிராமங்களுடன் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இதில் கஞ்சபள்ளியில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் 20 சதவீகதம் அளவிற்கு தனி கழிவறை வசதி உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகாமையில் தோட்டங்களில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கஞ்சப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகா மையில் அமைந்துள்ள பெண்களுக்கான பொதுசு காதார வளாகம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பொது சுகாதார வளாகம் திறக்கப்படாமலே உள்ளது.

    இதனை பொதுமக்கள் பலமுறை கேள்வி எழுப்பியும் உயர் அதிகாரிகள் வந்தவுடன் திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் கூறி வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் 20-ந்தேதி முதல் மூடப்படும்.
    • அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 20-ந்தேதி முதல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

    கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்துவதற்காக தமிழக அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்குவதால் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்காமல் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு பஸ் மேனேஜர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் புதிய பஸ் நிலையம் சென்று ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் வெளிப்புறம் மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்லவும், அதேபோல் மதுரை, தேனியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் டி.பி மில்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ெரயில்வே பீடர் சாலை வழியாக செல்லவும், சத்திரப்பட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதியிடம் கேட்டபோது, இன்று பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. வருகிற 20-ந்தேதி முதல் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல அனுமதிக்க மாட்டாது. அன்று முதல் மேற்குறிப்பட்ட முறையில் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு
    • டாஸ்மாக் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மதுவிலக்கு ஆயத்துறை ஆணையர் உத்தரவுப்படி, வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் அனைத்தும் மூட வேண்டும்
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் அனைத்தும் 16-ந் தேதி, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    சென்னை மதுவிலக்கு ஆயத்துறை ஆணையர் உத்தரவுப்படி, வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 16-ந் தேதி, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
    • மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேறகொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை சுதந்திர தினத்தன்று மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.

    தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேறகொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராவல் மண் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைப்பணிகளுக்கு என்று கிராவல் மண் குவாரி செயல்பட்டு வந்தது. இதனையடுத்து குவாரியில் இருந்து வெளியே வந்த டிப்பர் லாரிகளை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையறிந்த வட்டா ட்சியர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் இதுதொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கிராம மக்களை சமரசம் செய்து உங்கள் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் என்றார்.

    அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், கண்ணங்குடி ஒன்றியத்தில், கண்டியூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் மதுசூதனரெட்டி கலந்து கொண்டதை அறிந்து நேரில் சென்று மனு அளித்தனர்.

    அதில் கல்லங்குடி, புதூர், தே.வயல் கிராம மக்களுக்கும், எங்களுக்கும் மற்றும் எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தரும் இடமாக செல்லியம்மன் கோவில் ஊரணி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஊரணிக்கு மழை நீர் வருவது தடைபட்டு விடும். மேலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் ஆழமான குவாரியில் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே தாங்கள் குவாரியை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.
    • நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர்.

    அவினாசி,

    தமிழகம் மற்றும் கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜி கனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், 3 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில் 51 பேர், கேரள பிரிவில், 49 பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தினர் நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி ஜாகீர் மூசாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதையடுத்து, பதற்றம் நீடிப்பதால், நான்காவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கடந்த 23ம் தேதி போலீசார் மற்றும் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாகீர் மூசா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பின் தலைவரான ஜாகீர் மூசா கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

    நான்காவது நாளாக இன்றும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பி.எட். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புல்வாமாவில் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அனந்த்நாக் மாவட்டத்தில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெகரா நகரில் டிகிரி கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். #PonnamaravathiViolence

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo