புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மூடல்

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சில நாட்களிலேயே மூடப்பட்டு உள்ளது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால் மூடப்பட்டது
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மூடல்
Published on

அறந்தாங்கி,

அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட நற்பவளக்குடி ஊராட்சியில் குன்னக்குரும்பி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்கடை இருக்கக் கூடாது என்று கூறிகடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களை அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com