search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வன்னிக்கோேனந்தல் தம்பிராட்டி அம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா செல்வி அன்பழகன், ஒன்றிய ஆணையாளர் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலநீலித நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி, வன்னிக்கோேனந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் வீமராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், கூவாச்சிபட்டி செல்வம், காங்கிரஸ் கணேசன், முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • புதிய வாக்காளர்கள் படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024- ன் படி தென்காசி மாவட்டத்தில் 1.1.2024-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2005 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறும் வகையில் வரும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தற்போது படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு வாக்காளர்கள் சார்பில் உறவினர் எவரேனும் இறப்பு சான்று நகலுடன் படிவம் 7-யை பூர்த்தி செய்து பெயரை நீக்கம் செய்யலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயோ அல்லது தொகுதிக்கு வெளியிலோ புலம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8-யை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு சென்று இந்த வாக்காளர்களும் தங்களது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு முகாம்கள் இம்மாதம் 4,5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது.
    • முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், பெயர் பிழை திருத்தம்,முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற் காக இம்மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற உள்ளது. எனவே தென்காசி தெற்கு மாவட்ட பகுதிக்குட் பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல் லூர் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இம் முகாம்களில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், பாக பொறுப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பெயர் நீக்கம், பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றில் ஈடுபடுவதுடன். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இணைப்பதில் ஆர்வம் காட்டிட வேண்டும். குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • இதனால் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நேற்று மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைந்துள்ள சாலைகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்து ஓடிய சாலையினை கடக்க பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். நான்கு வழி சாலை பணிகளுக்காக குடிநீர் பைப்புகள் செல்லும் பகுதிகள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மழை நீர், சாக்கடை செல்ல இடமில்லாததால் இரண்டும் கலந்து சாலைகள் முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.சாலைகளில் தேங்கிய மழை நீரில் வாகனங்களும் தத்தளித்து சென்றன. 

    • சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு சீருடை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    • விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர்.
    • மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ' என்னும் எழுத்தை எழுதினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி அன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் சேர்க்கையின் போது மழலையர்கள் அட்சராப்பியாசம் செய்து தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான 'அ' என்னும் எழுத்தை எழுதினர். மழலையர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாடப்புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

    • வில்சன் சாலமன் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டணம் கிராமத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக இருந்து வருபவர் வில்சன் சாலமன் (வயது 58).

    கார் மோதி விபத்து

    இவர் தனது காரில் தென்காசி சென்று விட்டு மீண்டும் அடைக்க லபட்டணம் வருவதற்காக பாவூர்சத்திரம் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    12 மோட்டார்கள் சேதம்

    இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேத மடைந்தன. வில்சன் சாலமன் ஒட்டி வந்த காரும் பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி வில்சன் சாலமன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரங்களில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
    • 10-வது நாளான விஜயதசமி அன்று “அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா” நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த வருட நவராத்திரி விழா 15-ந் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு படிகளில் கொலுமேடை உருவாக்கப்பட்டது.

    நவராத்திரி பூஜையை மேலும் அழகாக்கும் வகையில் பள்ளியில் உள்ள லோட்டஸ், மார்னிங் குளோரி, ரைசிங் டைஸீ, சன் பிளவர் எனும் நான்கு அணி மாணவர்களும், இந்தியாவின் நான்கு திசைகளின் முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டு வகைகளை தனித்தனியே அவற்றின் தனித்தன்மை விளக்கும் விதமாக அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். மார்னிங் குளோரி அணி மேற்கு இந்திய மாநிலங்களையும், சன் பிளவர் அணி தென்னிந்திய மாநிலங்களையும், லோட்டஸ் அணி வட இந்திய மாநிலங்களையும், ரைசிங் டைஸி அணி கிழக்கு இந்திய மாநிலங்களையும், மையமாக வைத்து அவற்றின் பாராம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் தோன்றிய விதம், சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியதோடு அவற்றை அணி மாண வர்களே மாணவர்களுக்கும் கொலுவை காண வந்தவர்களுக்கும் விளக்கிக் காட்டினர்.

    மேலும் ஆசிரியைகளும், கொலுவினை தினமும் வித்தியாசமாகக் காட்டும் விதத்தில் அவற்றினை அலங்காரப்படுத்தியதும், அந்தந்த நாளுக்குரிய கோலங்கள், மலர்கள், பிரசாதங்களை அவர்களே தயார்செய்து வந்து அன்றாட பூஜையை அந்நாட்களுக்குரிய வண்ண உடை உடுத்தி, மாண வர்களோடு இணைந்து வழிபாடு செய்தனர்.

    9 நாட்கள் சிறப்பு பூஜையுடன் கூடிய வழிபாடு தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.10-வது நாளான விஜயதசமி அன்று "அன்னை மடியில் ஆரம்பக் கல்வி விழா" நடைபெற்றது. அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உடன் வாழை இலை, பச்சரிசி, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தார்.

    • முகாமில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்களுக்கு இயற்கை உரங்களை விதைத்து நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் இலஞ்சி குமார கோவில் அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்திய மக்களின் உயிர்நாடி விவசாயம் என்பதை உணர்த்தும் வகையில் வேளாண்மை தொழிலில் பயிர் செய்யும் முறை பற்றியும், பயிர் பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றியும், பயிர் விளைச்சலில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை பற்றியும் எடுத்து ரைக்கும் விதமாக மாணவ- மாணவிகள் விவசாயம் செய்வதற்கு பாரம்பரிய ஆடை யினை அணிந்து வயல் வெளியில் நாற்றுகள் நட்டு, பயிர்க ளுக்கு இயற்கை உரங்களை விதைத்தும், தண்ணீர் பாய்ச்சு தல் போன்ற வேளாண் செயல்களை தங்களின் நேரடி செயல்பாடுகளின் மூலம் அறிந்து கொண்டனர்.

    விழிப்புணர்வுக்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில், மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி பேசுகையில், அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்த உதவிய சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அடுத்ததாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஆலோ சனைகள் வழங்கினார்.மேலும் பாராளுமன்ற தேர்தலுக்காக தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோ சனைகள் வழங்கினார்.

    • தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாலிபன்பொத்தை, டி.என்.எச்.பி காலனி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு, களக்கோடித் தெரு, பாறையடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    கலெக்டர் திறந்து வைத்தார்

    இதில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, உதவி செயற் பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரன், கார்த்திகா, நாகூர் மீரான், ரெஜினா, சீதாலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கலநாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×