என் மலர்
நீங்கள் தேடியது "Anganwadi Building"
- பாதை வசதி இல்லாமல் அங்கன்வாடி கட்டிடம் பூட்டிக்கிடக்கிறது.
- ஆக்கிமிப்புகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துகுழி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். வயல்வெளியோர பகுதியில் இந்த கட்டிடம் உள்ளதால் மழை காலங்களில் நீர் ஊற்றெடுத்து மையத்தின் முன்பு தேங்கி நின்று சேறு சகதியாக மாறி பாதை வசதியில்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் வழியில் முள் செடிகள் முளைத்து அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது.
அங்கன்வாடி மையக்கட்டத்தில் சுவர்கள் மற்றும் தரைதளங்கள் அங்காங்கே புதைகுழி போல் பெயர்ந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை மந்தையில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றம் செய்து தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி பேவர்பிளாக் சாலை அமைத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
- ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
- சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.
சுரண்டை:
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுரண்டை ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா மற்றும் சுரண்டை வரகுணராமபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தி.மு.க .நகர செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகர் மன்ற உறுப்பினர் சாந்தி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆறுமுகசாமி,பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ்,ஆலடிப்பட்டி எஸ்.கே.ராமசாமி, சங்கர நயினார், கூட்டுறவு கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன்,டான் கணேசன்,மெடிக்கல் கார்த்திக்,சசிகுமார், ஜேம்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர்,தேவேந்திரன், பால் துரை, நகராட்சி உறுப்பினர்கள் ஜெயராணி வள்ளி முருகன்,அமுதா சந்திரன்,வேல்முத்து, ரமேஷ்,ராஜ் குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புங்கனூர் அங்கன்வாடி கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது
- அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.
திருச்சி
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பஞ்சாயத்து அலுவலகம் அங்கன்வாடி கட்டிடம் ரேஷன் கடை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடங்களுக்கு மத்தியில் தென்னை மரங்கள் புளிய மரங்கள் இருக்கின்றன.
அவற்றில் ஒரு தென்னை மரம் மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று இரவு அங்குள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்தது. இந்த கட்டிடம் ஒடுகளால் வேயப்பட்டது என்பதால் கட்டிடத்திற்கு பெரிய சேதம் ஏற்படவில்லை.
அத்துடன் மரத்திலிருந்த தேங்காய்கள் மற்றும் இளநீர்கள் தெறித்து அருகில் இருந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பால் சங்க கட்டிடங்களில் விழுந்துள்ளது. இரவில் விழுந்ததால் அங்கு பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மற்றும் ரேசன் கடை, பால் சங்க கட்டிடத்திற்கு பால் வாங்க வரும் பொதுமக்கள், அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.
மரம் முறிந்து விழுந்ததை அறிந்த புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உடனடியாக அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் பழுதடைந்த மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக அப்புறப்படுதவும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
- பூமிபூஜை போட்டு தொடங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி ராமனூர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க ரூ. 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் கட்டிடம் பணியை க.தேவராஜி எம்.எல்.ஏ. பூமிபூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சிந்துஜா ஜெகன், கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் அரவிந்தன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி எஸ் பெரியார்தாசன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
- பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- கூட்டத்தில் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
- யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தென்காசி:
கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் காவிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் கண்ணன்,மேலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பழுதடைந்த 10 பள்ளி கட்டிடங்களை முதற்கட்டமாக பழுது நீக்குவதற்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.32 லட்சத்து 76 ஆயிரமும், பழுதடைந்துள்ள 18 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுது நீக்குவதற்கு ரூ.39 லட்சம் என மொத்தம் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கவுன்சிலர் முருகேசன் கூறும் போது, குறும்பலாபேரி கோவில் மைதானம் தற்போது பெய்த மழையால் சேரும் சகதியுமாக உள்ளது. எனவே அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய யூனியன் தலைவி காவேரி, இது தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டும் பஞ்சாயத்து மூலம் கொசு மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கவுன்சிலர் சரவணன் கூறும் பொழுது பூலாங்குளம் பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதற்கு ஆணையாளர் கண்ணன் இதற்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு இருந்தன.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நெல்வாய் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு, திமுக மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ. ரவி, ஞானவேல், தினகரன், சங்கர், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், முன்னாள் சேர்மன் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஜயரெகுநாதபட்டி அங்கன்வாடி மையம் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது
- தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென ஆங்காங்கே இடிந்து விழுந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பினர். தற்போது அங்கு பயிலும் 20 குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
சிதலமடைந்த அந்த கட்டிடத்தால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், அதில் 20 மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கல்வி பயின்று வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க–வில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டடத்தை கட்டிக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர் ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா தலைமையில் நடந்தது. அன்னூர் தாசில்தார் ராஜன் வரவேற்றார்.
விழாவில் குன்னத்தூர் பஞ்சாயத்து குன்னத்தூரில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பொகளூர் பஞ்சாயத்து கோபிராசிபுரத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பச்சாபாளையம் பஞ்சாயத்து மோளபாளையத்தில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், நாராணபுரம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், காரேகவுண்டன் பாளையம் பஞ்சாயத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜா பேசும்போது, அன்னூர் ஊராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கை தயாரிக்கப்படும்.
தற்போது கோடை மழை பெய்து வருகிறது. தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 மரக்கன்று நடப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 சென்ட் முதல் 40 சென்ட் அளவில் உள்ள அரசு நிலங்களில் அன்னூர் பகுதியில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரக்கன்று வளர்க்க தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பேசினார்.
விழாவில் 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெற ஆணை வழங்கப்பட்டது.விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயராணி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளவரசு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.