சுரண்டை அருகே வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம்- சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்

ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.
அங்கன்வாடி  கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சுரண்டை:

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுரண்டை ஆலடிப்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா மற்றும் சுரண்டை வரகுணராமபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தி.மு.க .நகர செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகர் மன்ற உறுப்பினர் சாந்தி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆறுமுகசாமி,பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ்,ஆலடிப்பட்டி எஸ்.கே.ராமசாமி, சங்கர நயினார், கூட்டுறவு கணேசன், இளைஞர் அணி முல்லை கண்ணன்,டான் கணேசன்,மெடிக்கல் கார்த்திக்,சசிகுமார், ஜேம்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர்,தேவேந்திரன், பால் துரை, நகராட்சி உறுப்பினர்கள் ஜெயராணி வள்ளி முருகன்,அமுதா சந்திரன்,வேல்முத்து, ரமேஷ்,ராஜ் குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com