search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி, வளர்ச்சி என அனைத்தும்  திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது - மாப்பிள்ளையூரணியில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    மாப்பிள்ளையூரணியில் ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு கனிமொழி எம்.பி. பொருட்களை வழங்கிய காட்சி.

    கல்வி, வளர்ச்சி என அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது - மாப்பிள்ளையூரணியில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு

    • மாப்பிள்ளையூரணியில் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
    • இந்த பகுதியில் ரூ. 13 கோடியே 32 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணியில் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பல்நோக்கு கட்டிடம்

    பின்னர் சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 11.77 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் வடக்கு சோட்டையன் தோப்பில் உள்ள அம்பேத்கார் படிப்பகத்தை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ. 12.30 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

    ரூ.2 கோடி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அடிக்கடி சொல்வது எல்லாம் கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுவார். அதனடிப்படையில் இந்த பகுதியில் ரூ. 13 கோடியே 32 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்த பகுதியில் முதல்-அமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடிக்கு மேல் ஓதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மின் மயானம் பணியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கல்வி, வளர்ச்சி என அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணை கலகெ்டர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய், மேற்பார்வை யாளர் முத்துராமன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், துணை பதிவாளர் மாரியப்பன், செயலாட்சியர் சாம் டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், ஹரிபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஆனந்தி, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மகேஸ்வரி, சக்திவேல், ஜேசுராஜா, பாண்டியம்மாள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×