search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்-நாளை, நாளை மறுநாள் நடக்கிறது
    X

    தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்-நாளை, நாளை மறுநாள் நடக்கிறது

    • காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • புதிய வாக்காளர்கள் படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு சுருக்க திருத்தம் 2024- ன் படி தென்காசி மாவட்டத்தில் 1.1.2024-ந் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2005 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பெறும் வகையில் வரும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிறுக்கிழமை) மற்றும் வருகிற 18, 19-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தற்போது படிவம் 6-யை பெற்று தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். இறப்பு வாக்காளர்கள் சார்பில் உறவினர் எவரேனும் இறப்பு சான்று நகலுடன் படிவம் 7-யை பூர்த்தி செய்து பெயரை நீக்கம் செய்யலாம். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயோ அல்லது தொகுதிக்கு வெளியிலோ புலம் பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 8-யை பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி அமைவிடத்திற்கு சென்று இந்த வாக்காளர்களும் தங்களது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×