என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foundation Stone Laying Ceremony"

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
    • கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் அடிக்கல்லை நாட்டினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சி மன்ற செயலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலை செல்வி, துணை சேர்மன் கலா, துணைத் தலைவர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திர சேகரன் அடிக்கல் நாட்டி னார். திருமலை குமார் நன்றி உரையாற்றினார். இதில் தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஷாகிரா பானு, கால்நடை மருத்துவர் சிவக்குமார், சாலை ஆய்வாளர் சிவகுமார், தலைமை ஆசிரியர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் கரடி முத்து, ராஜசேகர், ராஜம்மாள், மீனா, கலா, மகேஸ்வரி, இசக்கியம்மாள், கண்ணம்மாள், முன்னாள் பொதுப்பணி குமார், ஒப்பந்ததாரர் சீதாராமன், சுபாஷ், மக்கள் நல பணியாளர்கள் சீனி யம்மாள், ஆப்ரேட்டர்கள் மதிவாணன், கண்ணன், முருகன், பாலகிருஷ்ணன் கிளாங்காடு முத்து, கிருஷ்ண சாமி அருணாச்சலம், மாரியப்பன், வயல் காட்டு காலனி சுடலை, ராமர், கற்குடி சுரேஷ், ராஜ்குமார் கிளாங்காடு ராமர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • கட்டிட பணிக்கான அடிக்கல்லை சிவபத்பநாதன் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.9.13 லட்சத்தில் பகுதி நேர ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கட்டிட பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஒன்றிய பிரதிநிதி அரிச்சந்திரன், பொருளாளர்துரை, கிளைச் செயலாளர்கள் சமுத்திரபாண்டி,செல்வராஜ், ராஜேந்திரன், பொன்னுத்துரை, கே.செல்வராஜ், ஊராட்சி உறுப்பினர் தங்கராஜ் மற்றும் அருணாசலம், கருப்பசாமி, பாலச்சந்திரன், கணேசன், மாரிச்செல்வம், பாலகுமார், முருகேசன், கணபதி நாடார், பலவேசம் நடராஜன், கண்ணன், கதிர்குமார், மகேஷ், கோபால்,மாரிச்செல்வன், மகேஷ்வரன், நவீன் கிருஷ்ணன், ஆனந்த், ரேவதி, முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
    • 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • கே.கே.நகர் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி.
    • அம்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.39 கோடியே 75 லட்சம் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃக்கு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் போரூர், ராமாபுரத் தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.15.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட டாக்டர் எம். எஸ். சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 4 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்.

    திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு சந்தை வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டிலும், போரூர், கணேஷ் நகரில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ள பன்னோக்கு மையங்கள்.

    சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால் பந்து மைதானம், குத்தம் பாக்கம், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்.

    குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்.இ.டி.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சைதாப் பேட்டை, அம்மா பூங்காவை ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி யில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்.

    கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×